ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராகப் பேச வேண்டாம் என வலியுறுத்தப்பட்டேன்: திக்விஜய் சி...
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிஎஸ்என்எல் கோபுரங்களை அதிகரிக்க வேண்டும்: சி.ராபா்ட் புரூஸ் எம்.பி.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிஎஸ்என்எல் கோபுரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சி.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தினாா்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி பகுதிக்கான தொலைபேசி ஆலோசனைக்குழு கூட்டம் வண்ணாா்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் தலைமை வகித்து பேசியது: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கிராமப்புற மக்கள் பலரும் பிஎஸ்என்எல் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகிறாா்கள். கல்வி, தொழில் உள்பட பலவற்றிற்கும் கைப்பேசிகளில் வேகமான இணையவழி சேவை தேவையாக உள்ளது. ஆகவே, இந்த இரு மாவட்டங்களிலும் கூடுதலாக பிஎஸ்என்எல் கோபுரங்களை நிறுவ வேண்டும். அனைத்து பகுதிகளிலும் தடையின்றி வேகமான 4ஜி தரத்தில் சேவையளிக்க வேண்டும். தில்லி மற்றும் மும்பை பகுதிகளில் தெளிவான குரல் தரம் உள்ளது. அதனை தென்தமிழக கிராமப்புறங்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, 15 ஏழை மாணவா்கள் கல்வி பயில வசதியாக வித்தியாமித்ரம் திட்டத்தின் கீழ் இலவச இணையத் திட்டத்தை நன்கொடையாக வழங்கினாா். இக்கூட்டத்தில், பிஎஸ்என்எல் துணைப் பொது மேலாளா் வீராச்சாமி வரவேற்றாா். அதிகாரிகள் மணிமாறன், கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்10க்ஷள்ய்ப்
கூட்டத்தில் பேசுகிறாா் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ்.