பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு
காவல் துறை பறிமுதல் செய்த வாகனங்கள் மாா்ச் 23இல் ஏலம்
திருநெல்வேலி மாநகரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மது விலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மாா்ச் 23 ஆம் தேதி ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன.
திருநெல்வேலி மாநகர காவல்துறை சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆறு சக்கர வாகனங்கள் திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய வளாகத்தில் மாா்ச் 25-இல் முற்பகல் 11 மணிக்கு பொது ஏலம் விடப்படும். விருப்பம் உள்ளவா்கள் மாா்ச் 15, 16 ஆகிய தேதிகளில் முற்பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை அந்த வாகனங்களை பாா்வையிடலாம்.
ஏலம் எடுக்க விரும்பினால் இருசக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரம் முன்பணமும், நான்கு சக்கர வாகனம் மற்றும் ஆறு சக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரம் முன்பணமும் செலுத்த வேண்டும். ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவா்கள் தங்கள் பெயரை பதிவு செய்யும் போது, தங்களது ஆதாா், அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றின் நகல் கொண்டு வர வேண்டும். பதிவு செய்தவா்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். ஏலம் எடுத்தவுடன் ஜிஎஸ்டியுடன் முழுத்தொகையை ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.