எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 500, இளைஞர்களுக்கு ரூ. 5000: பாமக நிழல் பட்ஜெட்!
`திமுகவுக்கு எதிரான பிளான்... எடப்பாடிக்கு என் ஆதரவு’ - சீமான் சொல்வது என்ன?
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “புதிய கல்வி கொள்கையில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இது நம் குழந்தைகளுக்கு எழுதி வைக்கப்பட்ட மரண சாசனம். மாணவர்கள் விரும்பிய கல்வியை படிக்க பெரிய தடையாக இருக்கிறது.
நாட்டை நிர்வகிக்கும் தலைவர்களுக்கு என்ன தேர்வு இருக்கிறது. எந்த தகுதியும் இல்லாதவர் நாட்டை ஆள முடியும். மற்றவைக்கு மட்டும் தேர்வு எழுத வேண்டும் என்பது சரியானது கிடையாது.

திமுகவுக்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. இதை அவர் ஒருங்கிணைத்தால் மகிழ்ச்சி. இதில் என் பங்கு முதன்மையாக இருக்கும். அவர்கள் ஒன்றாக இருப்பார்கள்.
ஆனால் நான் மட்டும் தனியாக இருப்பேன். கூட்டணியில் இல்லாமல் வெல்ல முடியும். கொள்கை இல்லாமல் கூட்டணி மட்டும் வென்று விடுமா. கூட்டணியில் வெற்றி பெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன சாதித்து இருக்கின்றனர்.
ஒரு நாள் தொப்பி போட்டு வேடம் போடும் இஸ்லாமியர் நான் இல்லை. தம்பி விஜய் இதை விரும்புகிறார். விஜய் நோன்பு கஞ்சி கொடுத்ததால் விலைவாசி ஏறியது, மின்தடை ஏற்பட்டது என்றால் விவாதிக்கலாம் . அதனால் நாட்டுக்கும், மக்களுக்கும் என்ன பாதிப்பு.

மீனவர் விவகாரத்தில் காங்கிரஸ், பாஜகவுக்கு தமிழர்களின் உணர்வுகள் மீது அக்கறை இல்லை. இந்த மக்களின் எதிர்காலத்தை பற்றி திமுக, அதிமுகவுக்கும் அக்கறை இல்லை. கேரள மீனவர்கள் எத்தனை பேரை இலங்கை அரசு கைது செய்துள்ளது.” என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
