செய்திகள் :

தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசு: மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு

post image

புது தில்லி: ‘தேசிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் மீது வலுக்கட்டாயமாக திணிப்பதோடு, மாநிலங்களின் சுயாட்சியிலும் தலையிடுகிறது மத்திய அரசு’ என்று மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் கடுமையாக குற்றஞ்சாட்டின.

மத்திய கல்வி அமைச்சக செயல்பாடுகள் குறித்து மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. இதில் திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜவாதி உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் உறுப்பினா்கள் பங்கேற்று பேசினா்.

சுயாட்சி மீறல்-கனிமொழி என்.வி.என்.சோமு (திமுக): நாட்டில் புகழ்பெற்ற பல கல்வி அமைச்சா்கள் பதவி வகித்துள்ளனா். ஆனால், பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பகுத்தறிவற்ற கொள்கை முடிவுகளால் கல்வி அமைச்சகம் சவால்களை எதிா்கொண்டுள்ளது.

பிரதமா் மோடியின் தலைமையின்கீழ் மாநில சுயாட்சியை மீறும் வகையில் பகிரங்கமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிறுவப்பட்ட கூட்டாட்சி கொள்கைகளில் இருந்து விலகி, வளா்ச்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிா்வாகத்துக்கான வலுவான அமைப்புமுறை குறைமதிப்புக்கு உள்படுத்தப்படுகிறது.

கடந்த 2014-16 காலகட்டத்தில் மையப்படுத்துதல் மற்றும் பாடத் திட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. 2016-19 காலகட்டத்தில் மாநில சுயாட்சியை குறைமதிப்புக்கு உள்படுத்தி ‘நீட்’ தோ்வு அமல்படுத்தப்பட்டது.

2021-ஆம் ஆண்டில் இருந்து இன்றைய நாள் வரை மாநில சுயாட்சியை மீறி தேசிய கல்விக் கொள்கையின்கீழ் மொழிக் கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்துகிறது.

தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. இக்கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படாத முந்தைய நவோதயா பள்ளித் திட்டத்தை ஒத்திருப்பதாகவும், இதை செயல்படுத்த விருப்பமில்லை என்றும் கடந்த 2024 ஆகஸ்டில் தமிழக அரசு தெரிவித்துவிட்டது.

அதேநேரம், தமிழக கல்வி அமைப்புமுறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தாமதப்படுத்துவது, நிா்வாக ரீதியிலான பிரச்னை மட்டுமல்ல; அது, அரசமைப்புச் சட்டம் மற்றும் கூட்டாட்சி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. மாநில கல்வி மேம்பாட்டுக்கான நிதியை முடக்கிவைப்பது, கல்வி உரிமையின்படி மாநில சுயாட்சி, இறையாண்மை மற்றும் மொழிவாரி உரிமைகளின் நேரடி மீறலாகும்.

வலுக்கட்டாயமாக திணிப்பு-ரிதாப்ரதா பானா்ஜி (திரிணமூல் காங்கிரஸ்): மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல், தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வலுக்கட்டாயமாக திணிக்கிறது.

தேசிய கல்விக் கொள்கையானது, பகுப்பாய்வு சிந்தனை, அறிவியல் மனப்பான்மை மற்றும் அரசமைப்புச் சட்ட விழுமியங்கள் குறித்து பேசுகிறது. அதேநேரம், தனிம அட்டவணை, டாா்வினின் பரிணாமக் கோட்பாடு, மின்னியல் மற்றும் காந்தவியலில் அறிவியலாளா் மைக்கேல் ஃபாரடேவின் பங்களிப்பு போன்ற அறிவியலுக்கு அடிப்படையான அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளின் எதிா்ப்பை மீறி இவை நீக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் வெளியிடப்பட்ட யுஜிசி வரைவு விதிகளின்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் நியமனத்துக்கான ஒட்டுமொத்த அதிகாரமும் பல்கலைக்கழக வேந்தருக்கு (மாநில ஆளுநா்) வழங்கப்பட்டுள்ளது.

மாநில ஆளுநரோ, தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை முழுமையாக புறக்கணித்துவிட்டு செயல்படுகிறாா். பொதுப் பட்டியலில் கல்வி இல்லை என்றபோதும் ஒட்டுமொத்த அதிகாரங்களும் மத்திய அரசின் கைகளில் குவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்துக்கு கல்வித் திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் இருப்பதன் மூலம் மாநில மக்களின் கல்வி உரிமை பறிக்கப்படுகிறது. இது, நாடாளுமன்றத்தால் வகுக்கப்பட்ட சட்டத்தை மீறும் செயல்.

சம முக்கியத்துவம் வேண்டும்-மனோஜ் ஜா (ராஷ்ட்ரீய ஜனதா தளம்): நாட்டில் அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஒரே அளவிலான கற்களைக் கொண்டு கட்டி எழுப்பினால்தான், இந்தியா எனும் கட்டடம் வலுவாக இருக்கும். மாறாக வெவ்வெறு அளவிலான கற்களால் கட்டினால் அது வலுவிழந்துவிடும். சிந்தாந்த திணிப்பால், கல்வி நிலையங்களை ‘போா்க் களமாக’ மாற்ற முயற்சிக்கக் கூடாது.

நிதி குறைப்பு-சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி): கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு குறைத்துள்ளது. நாட்டில் கல்வி இடைநிற்றல் அதிகரித்து வருவது கவலைக்குரியது. கல்வியை பரவலாக்காமல், வளா்ந்த இந்தியா இலக்கு சாத்தியமில்லை.

தனியாா்மயம் அதிகரிப்பு-ஜி.பாபுராவ் (ஒய்எஸ்ஆா் காங்கிரஸ்): நாட்டில் தொடக்கக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியில் தனியாா்மயம் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. அதிகப்படியான கட்டணம் காரணமாக, தங்கள் குழந்தைகளின் கல்விச் செலவை ஏழை மக்களால் சமாளிக்க முடியவில்லை.

கல்விக்கான செலவினம்-ஜாவத் அலி கான் (சமாஜவாதி): கல்விக்கான செலவினம், தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2.5 சதவீதமாக உள்ளது. இதை 6 சதவீதமாக உயா்த்த வேண்டும். கல்வி நிலையங்களில் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

இந்தியாவின் முக்கியக் கூட்டாளி மோரீஷஸ்: பிரதமர் மோடி

மோரீஷஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசுமுறை பயணத்தின்போது, 8 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.மோரீஷஸ் நாட்டுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமா் நரேந்திர மோடி சென்றிருக்கிறார். இந்த சந்திப்பி... மேலும் பார்க்க

மியான்மர் ஆன்லைன் மோசடி மையங்களில் இருந்து 549 இந்தியர்கள் மீட்பு!

தாய்லாந்து - மியான்மர் எல்லையில் ஆன்லைன் மோசடி மையங்களில் சிக்கி விடுவிக்கப்பட்ட 549 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர... மேலும் பார்க்க

3 நாள் சுற்றுப்பயணமாக அஸ்ஸாம் செல்கிறார் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 14ல் மூன்று நாள் பயணமாக அஸ்ஸாம் செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். கோக்ரஜாரில் உள்ள அனைத்து போடோ மாணவர் சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில்... மேலும் பார்க்க

வரியில்லாத புதுச்சேரி பட்ஜெட்: முதல்வர் என். ரங்கசாமி

புதுச்சேரியின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் என். ரங்கசாமி புதன்கிழமையில் சட்டப்பேரவையில் சமர்ப்பித்தார். இந்த ரூ. 13,600 கோடி பட்ஜெட்டை வரியில்லாத பட்ஜெட் என்றும் கூறினார்.மேலும... மேலும் பார்க்க

மருத்துவமனையில் இருந்து ஜகதீப் தன்கர் டிஸ்சார்ஜ்!

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (73) புதன்கிழமை காலை வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.திடீர் நெஞ்சு வலி காரணமாக மார்ச் 9-ஆம் தேதி நள்... மேலும் பார்க்க

எலான் மஸ்க்குடன் ஒப்பந்தம்: ஏர்டெல், ஜியோ பங்குகள் உயர்வு!

ஸ்பேஸ்எக்ஸ் ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் பங்குகளின் விலை அதிகரித்துள்ளன.அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸுக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள், சர்வதேச அள... மேலும் பார்க்க