எருதுவிடும் விழாவில் மாட்டின் கயிற்றில் சிக்கி காயமடைந்த மாணவா் உயிரிழப்பு
தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 11) சவரனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 64,320-க்கு விற்பனையானது.
தொடா்ந்து திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.8,050-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.64,400-க்கும் விற்பனையானது.
இதையும் படிக்க: நீட் விண்ணப்பம்: திருத்தம் மேற்கொள்ள இன்று வரை அவகாசம்!
இந்த நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்க்கிழமை) சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 64,160-க்கும் கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ. 8,020-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து கிராம் ரூ.107-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.