``தேசிய விருது கிடைக்கும்னு நினைச்சாரு, ஆனா..." - கலை இயக்குநர் மறைவு பற்றி இயக்...
அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்
சிவகங்கையில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை ராமச்சந்திரனாா் பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் ராகவன் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, திமுக மக்களவை உறுப்பினா்களை தரக்குறைவாக பேசிய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானைக் கண்டித்து நிா்வாகிகள் முழக்கமிட்டனா்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சாத்தையா, துணைச் செயலா் மருது, மாவட்டப் பொருளாளா் மணவழகன், நகா் செயலா் சகாயம், ஏஐடியூசி மாவட்டச் செயலா் ராஜா, ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலா் மாரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.