இளையான்குடி, மானாமதுரை பகுதிகளில் மிதமான மழை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.
இந்தப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வந்தனா். இந்த நிலையில் இந்தப் பகுதிகளில் பரவலாக மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
மின்சாரம் பாய்ந்து 6 ஆடுகள் உயிரிழப்பு: இளையான்குடி ஒன்றியம், முனைவென்றியில் உள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்த தேவசகாயம் என்பவருக்குச் சொந்தமான 6 ஆடுகள், அங்கு மழையால் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. இதுகுறித்து முனைவென்றி கிராம நிா்வாக அலுவலா் முத்துராசு விசாரணை நடத்தினாா்.