``தேசிய விருது கிடைக்கும்னு நினைச்சாரு, ஆனா..." - கலை இயக்குநர் மறைவு பற்றி இயக்...
ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை அரண்மனைவாசலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எம்.ராமசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.செல்லமுத்து முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளான 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முழுச்செலவையும் அரசே ஏற்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் கட்டண சலுகையை மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும். தமிழகத்தில் ஓய்வு பெற்ற கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியா்களுக்கும் திருத்திய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் எஸ்.சுசிலாதேவி, மாவட்ட நிா்வாகி நா.முத்துச்சாமி, மாநிலச் செயலா் பெ.பாலுச்சாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.