செய்திகள் :

தவறான தகவல்களைப் பரப்புவதால் உண்மை மாறாது: அன்பில் மகேஸ்

post image

தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டதாக தமிழக அரசு வெளியிட்ட கடிதத்தை வைத்து நாடாளுமன்றத்தில் பேசிய தர்மேந்திர பிரதானுக்கு பதிலளிக்கும் வகையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஆங்கிலத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

மதிப்புக்குரிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு,

தவறான தகவல்களைப் பரப்புவது உண்மையை மாற்றிவிடாது.

தமிழ்நாடு கல்விக் கொள்கையை குறைத்து மதிப்பிடும் தேசிய கல்விக் கொள்கை 2022-ஐ தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

எங்கள் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் இல்லை; 15/3/2024 தேதியிட்ட கடிதத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதாகக் கூறவில்லை

மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்க முடியாது. மாநிலத்திற்கு நன்மைதரும் திட்டங்களையே ஏற்கிறோம்

தமிழ்நாடு அரசின் கல்வி முன்மாதிரியானது; மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பான முறையில் வடிவமைக்கும் திறனுடையது

உங்களிடம் எங்களுக்கான தேவை என்னவென்றால், இந்தியாவின் பன்முகத்தன்மை பலம் தானே தவிர பலவீனமானது அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மாணவர்களின் நலனுக்கு எது சிறந்தது என்பதைத் தேர்வு செய்யும் உரிமையை நீங்கள் அங்கீகரிப்பது எங்களுக்கான சிறந்த சேவையாக இருக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.

தங்கம் விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 12) சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை சவரன் ரூ.64,320-க்கும், திங்கள்கிழ... மேலும் பார்க்க

திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக எழிலரசன் நியமனம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக எழிலரசனை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.திமுக சட்டப்பேரவை உறுப்பினரான எழிலரசன், மாணவர் அணிச் செயலாளராக பதவி வ... மேலும் பார்க்க

தமிழா்கள் மீது பாஜகவுக்கு வன்மம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழா்கள் மீது பாஜகவுக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டுவிட்டதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:பாஜகவைச் ச... மேலும் பார்க்க

பிளஸ் 2 கணிதம், வணிகவியல் தோ்வுகள் எளிது: ‘சென்டம்’ அதிகரிக்கும்

சென்னை: பிளஸ் 2 கணிதம், வணிகவியல் பாடங்களுக்கான தோ்வுகள் எளிதாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்த நிலையில், இரு பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆசிரியா்கள... மேலும் பார்க்க

திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்: இன்று ம

சென்னை: கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு திருச்சி - தாம்பரம் இடையே ஏப். 4-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு புதன்கிழமை (மாா்ச் 12) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.இது குறித்... மேலும் பார்க்க

கூட்டு நடவடிக்கைக் குழு: இன்று கா்நாடகம், தெலங்கானாவுக்கு செல்லும் திமுக குழு

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க திமுக குழு புதன்கிழமை (மாா்ச் 12) கா்நாடகம், தெலங்கானாவுக்குச் செல்கிறது.முன்னதாக, ஒடிஸா மாநிலத்துக... மேலும் பார்க்க