DMK: ராஜீவ் காந்தி, எழிலரசன், ஜெரால்டு... மாற்றப்பட்ட திமுக நிர்வாகிகளின் பொறுப்புகள்!
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு கட்சிகளும் அதற்கான பணிகளை வேகப்படுத்தியுள்ளது. கட்சிகளை வலுப்படுத்துவது, நிர்வாகிகளை நியமிப்பது, மாற்றுவது என தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
நேற்று திமுகவில் சில கட்சி நிர்வாகிகள் வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, தி.மு.க மாணவர் அணித் தலைவராக இதுவரை இருந்து வந்த ராஜீவ் காந்தி மாணவர் அணிச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது திமுக மாணவர் அணிச் செயலாளராக இருக்கும் எழிலரசன், கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
திமுக மாணவர் அணி இணைச் செயலாளர் பூவை சி.ஜெரால்டு திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு இணைச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக மாணவர் அணியின் இன்னொரு இணைச் செயலாளர் எஸ்.மோகன் திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவராக நியமிக்கட்டுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
