செய்திகள் :

`நாங்க ஆட்சிக்கு வந்ததும் முஸ்லிம் MLA-க்களை சட்டசபையிலிருந்து...' - பாஜக சுவேந்து அதிகாரி சர்ச்சை

post image

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 2026-ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான அரசியல் வேலைப்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டன. இதில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்கத்தில், தொடர்ச்சியாக பாஜக எம்.எல்.ஏ-க்கள் ஆளுங்கட்சிக்கு தாவிவருகின்றனர். 2021 தேர்தலில் 77 வென்ற இடங்களை வென்ற பா.ஜ.க-விலிருந்து, தற்போது கடைசியாக வெளியேறிய தபசி மோண்டல் வரை மொத்தம் 12 எம்.எல்.ஏ-க்கள் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்திருக்கின்றனர்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மறுபக்கம், எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உட்பட 4 பாஜக எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தில் சபாநாயகர் முன்பு அமளியில் ஈடுபட்டதால் பிப்ரவரி 17 முதல் பட்ஜெட் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில், 2026-ல் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் எம்.எல்.ஏ-க்களை சட்டமன்றத்திலிருந்து தூக்கியெறிவோம் என சுவேந்து அதிகாரி பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

சட்டமன்றத்துக்கு வெளியே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, ``முஸ்லீம் லீக்கின் அடுத்த வெர்ஷன் போல வகுப்புவாத நிர்வாகமாக மம்தா அரசு நடந்துகொள்கிறது. இம்முறை, வங்காள மக்கள் அவர்களை (திரிணாமுல் காங்கிரஸ்) வேரோடு பிடுங்கி எறிவார்கள். 2026-ல் ஆட்சிக்கு வந்தால் திரிணாமுல் முஸ்லிம் எம்.எல்.ஏ-க்களை சட்டமன்றத்திலிருந்து சாலைக்கு வெளியே தூக்கியெறிவோம்." என்று கூறினார். சுவேந்து அதிகாரியின் இத்தகைய பேச்சுக்கு பா.ஜ.க தலைவர்கள் யாரும் கருத்து தெரிவிக்க முன்வரவில்லை.

அதேசமயம், ஆளுங்கட்சியினர் இதனை வெறுப்புப் பேச்சு என்று பாஜக மீது கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இந்த விவகாரத்தில் நேற்று செய்தியாளர்களிடத்தில் பேசிய திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், ``இது மிகவும் ஆட்சேபனைக்குரிய கருத்து. மேற்கு வங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவர் மதத்தின் பெயரால் பாகுபாடு காட்ட முடியாது. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களை தூக்கியெறிவோம் என்ற சொல்ல முடியாது. இந்த மனநிலை சரியானது இல்லை. நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ விவாதங்கள் இருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களைக் குறிவைத்து மதத்தைக் கொச்சைப்படுத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இது ஆபத்தானது, இது கிரிமினல் குற்றம்." என்று கூறினார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

'சிங்கிள் பேமென்ட்' - நண்பருக்கு உதவி செய்ய டெஸ்லா கார் வாங்கிய ட்ரம்ப் - பின்னணி என்ன?!

'அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா' என்பதன் தற்போதைய அக்மார்க் எடுத்துகாட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்பும், அவரது நண்பர் எலான் மஸ்க்கும். ஒரு காலத்தில் எலியும், பூனையுமாக இருந்த இருவரும், அமெரிக்க தேர்தல் பிர... மேலும் பார்க்க

`என்னை அச்சுறுத்துகிறார்கள்; எமோஷனலாக உடைந்துவிட்டேன்' - தங்க கடத்தல் வழக்கு குறித்து ரன்யா ராவ்

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு தற்போது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் இருக்கிறார். தொடை... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை : `ஒரு வாக்கு, ஒரு மதிப்பு; எதிர்காலம் காக்க..!’ - இரா.சிந்தன்| களம் பகுதி 2

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ... மேலும் பார்க்க

Dharmendra Pradhan: 'நவீன் பட்நாயக்கின் தலைவலி; மோடியின் தூதுவர் - யார் இந்த தர்மேந்திர பிரதான்?

'ஒடிசா அரசியல்!'புத்தாயிரத்தின் தொடக்கத்தில் 2000 ஆம் ஆண்டில் நடந்த ஒடிசா சட்டமன்றத் தேர்தல் அது. பிஜூ பட்நாயக்கின் மறைவுக்குப் பிறகு நவீன் பட்நாயக் கட்சிக்குத் தலைமையேற்று அந்தத் தேர்தலுக்கான வேலைகளை... மேலும் பார்க்க

`NEP-யை விட சிறப்பாகச் செயல்படும் ஒரு மாநில கல்வியை ஏன் சீர்குலைக்க வேண்டும்?'- அன்பில் மகேஸ் கேள்வி

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசுக்கும், தமிழ்நாடு தி.மு.க அரசுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. நேற்றுவரை, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் ரூ. 2,000 கோடி நிதி க... மேலும் பார்க்க

Russia-Ukraine War: '30 நாள்களுக்கு போர் நிறுத்தம்' - அமெரிக்கா, உக்ரைன் பேச்சுவார்த்தையில் முடிவு?

'ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம்', 'கனிம வள ஒப்பந்தம்' - இப்படி பல எதிர்பார்ப்புகளோட நடந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு படுதோல்வியில் முடித்தது. சந்திப்பிற்கு பிறக... மேலும் பார்க்க