`தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா... உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்!' - ஸ்டாலின் க...
'சிங்கிள் பேமென்ட்' - நண்பருக்கு உதவி செய்ய டெஸ்லா கார் வாங்கிய ட்ரம்ப் - பின்னணி என்ன?!
'அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா' என்பதன் தற்போதைய அக்மார்க் எடுத்துகாட்டு அமெரிக்க அதிபர் ட்ரம்பும், அவரது நண்பர் எலான் மஸ்க்கும்.
ஒரு காலத்தில் எலியும், பூனையுமாக இருந்த இருவரும், அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் போது கைக்கோத்தனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதில் எலான் மஸ்க்கின் பங்கு கணிசமாக உள்ளது. அந்த உதவியை மறக்காமல், அமெரிக்க அதிபராக வெற்றி பெற்ற பிறகு, தான் ஆரம்பித்த புதிய துறையில் எலான் மஸ்க்கை 'லீட்' ஆக நியமித்தார் ட்ரம்ப்.
அரசியல் விவாதங்கள், கொள்கை வகுப்பு போன்றவற்றில் கலந்துகொள்வது என அமெரிக்க அரசியலில் ஏறுமுகம் கண்ட மஸ்க், தனது ஆணி வேறான பிசினஸில் தற்போது சற்று சறுக்கியுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களில், டெஸ்லா நிறுவன பங்குகள் 45 சதவிகிதம் குறைந்துள்ளது. தனக்கு முன்னர் உதவியைநண்பனுக்கு தற்போது, உதவியுள்ளார் ட்ரம்ப். டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் காரை நேற்று வாங்கியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
பிரகாசமான சிவப்பு நிறத்தில் இருக்கும் அந்த காரை ஒரு பைசா கூட தள்ளுபடி இல்லாமல் முழு விலையில் கிட்டத்தட்ட 80,000 டாலருக்கு வாங்கியுள்ளார். அதுவும் சிங்கிள் பேமென்ட்டில்.
"மஸ்க் எனக்காக தள்ளுபடி தருவார் தான். ஆனால், அதை நான் பெற்றால், அவரிடம் இருந்து பலன் பெற்றதாக கூறுவார்கள்" என்று கூறியுள்ளார்.
கார் வாங்கியப் பிறகு ட்ரம்ப் ஓட்டுநர் சீட்டில் அமர, எலான் மஸ்க் பக்கத்து சீட்டில் அமர்ந்து அந்த காரின் அம்சங்களை விளக்கினார். அமெரிக்க அதிபர் காரை இயக்கக் கூடாது என்பதால், ``இந்தக் காரை வெள்ளை மாளிகையில் விட்டுவிடுவேன். எனது பணியாளர்கள் இதை ஓட்டுவார்கள்" என்று கூறியுள்ளார்.
"என்ன நடக்கிறது என்பதை பார்த்தப் பிறகு, நான் 'டெஸ்லா கார் வாங்க வேண்டும்' என்று கூறினேன். அப்படியே நடந்து (வெள்ளை மாளிகையின்) முன்பக்கம் வந்தபோது, மஸ்க் மூன்று கார்களை கொண்டு வந்திருந்தார். அதில் ஒன்றை வாங்கினேன். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை" என்று கார் வாங்கிய பிறகு ட்ரம்ப் பேசியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது டெஸ்லா காரை வாங்கியுள்ளது முக்கிய நகர்வாகும். டெஸ்லா கார் விற்பனை குறைந்துள்ள சூழலில் அமெரிக்க அதிபர் அந்த காரை வாங்கும்போது, மக்கள் டெஸ்லா காரை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். இதனால், அதன் விற்பனை அதிகரிக்கும். தற்போது ட்ரம்பால் டெஸ்லா நிறுவனம் மீண்டும் லைம் லைட்டிற்கு வந்துள்ளது. அதன் பங்குகள் இனி கிடுகிடுவென உயரும். இவை இரண்டுமே எலான் மஸ்க்கின் தற்போதைய சூழலுக்கு மிகப்பெரிய உதவி ஆகும்.
ஓர் அதிபர் ஒரு பிராண்ட் காரை புரோமோட் செய்வதுபோல நடந்து கொள்கிறார் என்று இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளது.