செய்திகள் :

ஜக்கி வாசுதேவ் மீதான அவதூறு விடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

post image

ஜக்கி வாசுதேவ் மற்றும் அவரது ஈஷா அறக்கட்டளை மீது அவதூறு பரப்பும் விதமாக பத்திரிகையாளர் வெளியிட்ட விடியோவை நீக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்திரிகையாளரும் யூடியுபருமான ஷ்யாம் மீரா சிங் தனது யூடியுப் பக்கத்தில் ஈஷா அறக்கட்டளையில் சர்ச்சைக்குரிய பல சம்பவங்கள் நடைபெறுவதாக விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஜக்கி வாசுதேவ் அவரது ஆசிரமத்தில் சிறுமிகளை மேலாடையின்றி நிற்கச் சொல்வதாக அவர் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

இதுதொடர்பாக, ஷ்யாம் மீரா சிங் ஈஷா அறக்கட்டளைக்கு மின்னஞ்சல் அனுப்பி கேள்வி கேட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஈஷா அறக்கட்டளை சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதையும் படிக்க | ஹோலி பண்டிகை: மசூதிகளை திரையிட்டு மூட காவல்துறை உத்தரவு!

"ஷ்யாம் மீரா சிங் இதற்கு முன்பு ஒரு பிரபலமான நபர் பற்றி இதேபோன்ற விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து, பிரபலமானவர்களைத் தேர்ந்தெடுத்து விளம்பரத்திற்காக பரபரப்பான விடியோக்களை உருவாக்குவதே அவரது நோக்கம்" என்று ஈஷா அறக்கட்டளையின் வழக்குறைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

ஷ்யாம் மீரா சிங்

ஈஷா அறக்கட்டளை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளடக்கங்கள் அவதூறு ஏற்படுத்துபவை என்றும் இது பொது மக்களின் பார்வையில் சம்பந்தப்பட்ட நபரின் நற்பெயரை கெடுப்பதுபோல உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அவதூறு விடியோவை நீக்குமாறு ஷ்யாம் மீரா சிங்கிற்கு உத்தரவிட்ட அவர், பொதுமக்கள் அதனை பகிரவும், சமூக ஊடகத் தளத்திலும் பதிவேற்றவும் தடை விதித்தார்.

இந்த வழக்கு விசாரணை வருகிற மே 9 அன்று மீண்டும் நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

மராத்தியில் பேசுமாறு பஞ்சாயத்து அலுவலரைத் திட்டிய நபர் கைது!

கர்நாடக அரசு ஊழியரை மராத்தியில் பேசுமாறு தகாத வார்த்தைகளால் திட்டிய நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் திப்பன்னா சுபாஷ் டோக்ரே என்பவர் சொத்து தொடர்பான பிரச்சினைக்க... மேலும் பார்க்க

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.61% ஆக சரிவு!

நாட்டின் சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து பிப்ரவரியில் 3.61 சதவீதமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 சதவீதத்துக்கும் கீழாக சரிந்துள்ளது இதுவே முதல்முறையாகும். மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: தார்பாயால் மசூதிகளை மூட காவல்துறை உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 10 மசூதிகளை தார்பாயால் மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக நடைபெறும் நிகழ்வாக ஹிந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டி... மேலும் பார்க்க

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு: யோகி ஆதித்யநாத்

ஹோலி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழுள்ள பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். லக்னௌவில் நடந்த மானி... மேலும் பார்க்க

தில்லி ஆளுநருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறும் புதிய பாஜக அரசு?

தில்லி ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு எதிரான வழக்குகளை தில்லியின் புதிய பாஜக அரசு வாபஸ் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்லியில் 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோ... மேலும் பார்க்க

நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்கும் மோடி: பிரகலாத் ஜோஷி

80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்க முன்முயற்சி எடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு மார்... மேலும் பார்க்க