தேசிய இளையோர் தடகளம்: 1,000 மீ. ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாதனை!
தில்லி ஆளுநருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறும் புதிய பாஜக அரசு?
தில்லி ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு எதிரான வழக்குகளை தில்லியின் புதிய பாஜக அரசு வாபஸ் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தில்லியில் 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது ஆளுநருக்கும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மோதல்கள் இருந்துவந்தன. முன்னாள் ஆளுநர்கள் நஜீப் ஜங், அனில் பைஜால் மற்றும் தற்போதைய ஆளுநர் வி.கே. சக்சேனா ஆகியோர் மீது ஆம் ஆத்மி அரசு பல்வேறு புகார்களை அளித்திருந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவி, தில்லி நீர்வள ஆணையத்துக்கு நிதி, தில்லி கலவர வழக்குகளில் வழக்கறிஞர்கள் நியமனம், யமுனை ஆற்றில் மாசுபாடு குறித்த உயர்நிலைக் குழு ஆகிய விவகாரங்களில் ஆம் ஆத்மி அரசு, தில்லி ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன.
இதையும் படிக்க | புற்றுநோய்க்கு மருந்தாகிறதா காளான்? - புதிய கண்டுபிடிப்பு!
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தில்லி பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள நிலையில், புதிய பாஜக அரசு, ஆளுநருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஆளுநருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறும் நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
27 ஆண்டுகளுக்குப்பிறகு தில்லியில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.