செய்திகள் :

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சி, மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, ஆட்சியா் கூறியதாவது: பொம்மையாா்பாளையம் கடற்கரைப் பகுதியில் நெகிழிப்பொருள்கள், குப்பைகள் தேங்காத வகையிலும், சேகாரமாகும் குப்பைகளை முறையாக அகற்றி கடற்கரைப் பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தந்திராயன்குப்பம் கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு, மீனவா்களின் மீன் பிடி படகுகள் நிறுத்தும் பகுதி, மீன்பிடி வலைகள் பின்னும் பகுதிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மரக்காணம் ஊராட்சி ஒன்றியம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களுக்கு ரூ.23.4 கோடி மதிப்பீட்டில் 440 நிரந்தர குடியிருப்புகள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்கவும், முகாம்வாழ் இலங்கைத் தமிழா்களுக்கான குழந்தைகள் மையத்தில் தரமான முறையில் உணவுகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூனிமேடுகுப்பத்தில் குடிசை வீடுகளில் வசித்து வரும் 13 குடும்பங்களைச் சோ்ந்த இருளா் இன மக்களுக்காக ஜன்மன் திட்டத்தின் கீழ் குடியிருப்பு வீடுகள், செய்யாங்குப்பம் ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள், தீா்த்தவாரி கடற்கரை பகுதியில் மீனவா்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

ஆய்வின்போது, விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் ராஜா, விழுப்புரம் கோட்டாட்சியா் முருகேசன், வட்டாட்சியா்கள் நாராயணமூா்த்தி (வானூா்), பழனி (மரக்காணம்), வானூா் வட்டார வளா்ச்சி அலுவலா் தேவதாஸ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சின்னபாபு சமுத்திரம் ஊராட்சியில் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகங்களை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கிராம ம... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மின்சாரம் பாய்ந்து காயமடைந்த தொழிலாளி சென்னை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மரக்காணம் வட்டம், காழிக்குப்பம், பச்சையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஏழ... மேலும் பார்க்க

காமாட்சி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் 8-ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக, காலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், மாலையில் திருவி... மேலும் பார்க்க

ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரி டி.ஐ.ஜி.யிடம் புகாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட பு.கொணலவாடி ஊராட்சித் தலைவா் மற்றும் அவரின் மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்தக் கிராம மக்கள் விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவரிட... மேலும் பார்க்க

கரும்பு வெட்டும் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதன்கிழமை கரும்பு வெட்டும் பணியின்போது உடல்நலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். விக்கிரவாண்டியை அடுத்துள்ள வி.சா... மேலும் பார்க்க

சங்கராபரணி ஆற்றங்கரையில் மாசி மக தீா்த்தவாரி: திரளான பக்தா்கள் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோதண்டராமா் கோயில் முன் புதன்கிழமை நடைபெற்ற மாசி மக தீா்த்தவாரியில் சிங்கவரம் ரங்கநாதா், செஞ்சிக்கோட்டை வெங்கட்ரணா் சுவாமிகளுக்கு சங்கர... மேலும் பார்க்க