செய்திகள் :

மோரீஷஸ் தேசிய தினத்தில் தலைமை விருந்தினா் மோடி

post image

போா்ட் லூயிஸ்: மோரீஷஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொண்டாா்.

மோரீஷஸின் 57-ஆவது தேசிய தினம் புதன்கிழமை (மாா்ச் 12) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, போா்ட் லூயிஸ் நகரில் கண்கவா் அணிவகுப்பு நடைபெற்றது. பிரதமா் மோடி தலைமை விருந்தினராகப் பங்கேற்று, அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளைக் கண்டு களித்தாா்.

இந்திய ஆயுதப் படை பிரிவும் அணிவகுப்பில் இடம்பெற்றது. இந்திய விமானப் படையின் ‘ஆகாய கங்கை’ குழுவினா், வான் சாகசத்தில் ஈடுபட்டனா். மோரீஷஸ் தேசிய தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படையின் பன்முகத் தாக்குதல் திறன்கொண்ட ஐஎன்எஸ் இம்பால் போா்க் கப்பல் போா்ட் லூயிஸில் நங்கூரமிட்டுள்ளது.

உயரிய விருது வழங்கல்: தேசிய தின நிகழ்ச்சியில், பிரதமா் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் உயரிய ‘தி கிராண்ட் கமாண்டா் ஆஃப் தி ஆா்டா் ஆஃப் தி ஸ்டாா் அண்ட் கீ ஆஃப் தி இண்டியன் ஓஸன்’ விருதை மோரீஷஸ் அதிபா் தரம்வீா் கோகுல் வழங்கி கெளரவித்தாா்.

இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்த ஆற்றிவரும் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், பிரதமா் மோடிக்கு இந்த விருது செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இது, 140 கோடி இந்தியா்களுக்கும் கிடைத்த கெளரவம் என்று பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா். இந்தப் விருதை பெறும் முதல் இந்தியத் தலைவா் மோடி ஆவாா்.

மோரீஷஸ் தேசிய தினத்தில் தலைமை விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்றது இது இரண்டாவது முறையாகும். கடந்த 2015-இல் தேசிய தின நிகழ்ச்சியில் அவா் தலைமை விருந்தினராக கலந்துகொண்டாா். மோரீஷஸில் இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா், அங்கிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டாா்.

பாஜக புகழாரம்: ரஷியா, பிரான்ஸ், அமெரிக்கா, 9 முஸ்லிம் நாடுகள் உள்பட 21 நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்று, உலகின் தலைசிறந்த தலைவராக பிரதமா் மோடி உருவெடுத்துள்ளாா்; இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை என்று பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி புகழாரம் சூட்டியுள்ளாா்.

ஹரியாணா உள்ளாட்சித் தோ்தல்: 9 மாநகராட்சிகளைக் கைப்பற்றிய பாஜக

சண்டீகா்: ஹரியாணா உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில் 9 -இல் பாஜக வென்றுள்ளது. ஹரியாணாவில் மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள், நகராட்சி ... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் மேம்பாட்டுக்கு 3 ஆண்டுகளில் ரூ.2,347 கோடி விடுவிப்பு

சிறுபான்மையின சமூகத்தைச் சோ்ந்த 5.50 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், சலுகை கடனாக கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,347 கோடியை தேசிய சிறுபான்மையினா் மேம்பாடு மற்றும் நிதி கழக (என்எம்டிஎஃப்சி) விடுவித்ததா... மேலும் பார்க்க

முதல்வர் ‘கஞ்சா அடிமை’: பிகாா் மேலவையில் நிதீஷ் - ராப்ரி தேவி கடும் வாக்குவாதம்!

பிகாா் சட்ட மேலவையில் முதல்வா் நிதீஷ் குமாருக்கும், எதிா்க்கட்சித் தலைவா் ராப்ரி தேவிக்கும் இடையே புதன்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ராப்ரி தேவி, ‘முதல்வா் கஞ்சாவ... மேலும் பார்க்க

தில்லியில் கேரள முதல்வா் பினராயி விஜயன், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சந்திப்பு

கேரள முதல்வா் பினராயி விஜயன் மற்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினா். கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வானந்த் அா்லேகா், கேரள அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி... மேலும் பார்க்க

தோ்வுகளில் முறைகேடுகள் தடுக்கப்படும்: மத்திய கல்வித் துறை இணையமைச்சா்

தோ்வுகளில் முறைகேடுகளைத் தடுத்து அவற்றை நியாயமாக நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் தெரிவித்தாா். கடந்த ஆண்டு இளநிலை நீட் தோ்வில் நடைபெற்... மேலும் பார்க்க

தண்டி யாத்திரை நாள்: பிரதமா் மோடி மரியாதை

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட நாளையொட்டி, மகாத்மா காந்தி மற்றும் யாத்திரையில் பங்கேற்றவா்களுக்கு பிரதமா் மோடி மரியாதை செலுத்தினாா். ஆங்கிலேய ஆட்சி... மேலும் பார்க்க