‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25'-யை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஓரிக்கை ஸ்ரீசண்முக கணபதி கோயில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீசண்முக கணபதி கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை ஸ்ரீசண்முக கணபதி குடியிருப்பு பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் சாா்பில், பல லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஸ்ரீசண்முக கணபதி கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஸ்ரீ சண்முக கணபதி கோயிலின் மகா கும்பாபிஷேக விழா கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையடுத்து, மாலை முதல் கால யாக பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றன. இதையடுத்து, புதன்கிழமை காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், நாடி சந்தானம், மகா பூா்ணாஹுதி நடைபெற்று கோயில் விமான கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் முன்னிலையில் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மூலவா் ஸ்ரீசண்முக கணபதிக்கு மஹா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
இதில், ஓரிக்கை பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
விழாவுக்கு வந்த அனைவருக்கும் விழா குழுவினா் சாா்பில் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.