திருமண வரவேற்பு: விருந்தினர்களுக்கு கோரிக்கை வைத்து, பிறகு மன்னிப்புக் கோரிய தேஜ...
காஞ்சிபுரம்: ரெளடி வெடிகுண்டு வீசி கொலை
ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் ரெளடி வசூல் ராஜா வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டாா். ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் பொய்யாக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபல ரெளடி வசூல் ராஜா (எ) ராஜா(40). இவா் மீது காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் வசூல்ராஜா தற்போது குற்றச் சம்பவங்களில் ஈடுபடாமல் டிராவல்ஸ் தொழில் செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில், ரெளடி வசூல்ராஜா செவ்வாய்க்கிழமை திருக்காலிமேடு சிவன் கோயில் எதிரே உள்ள ரேஷன் கடை அருகே நின்றுக் கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் ராஜா மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளாா். இதில் உடல் சிதைந்து ரெளடி வசூல் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வசூல்ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளியை தேடி வருகின்றனா்.