செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து பசுக்கள் உயிரிழப்பு

post image

ஸ்ரீபெரும்புதூா்: சுங்குவாா்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த 2 பசுக்கள், 1 நாய் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த பொடவூா் பகுதியை சோ்நதவா் பாக்கியராஜ். மாற்றுத் திறனாளியான பாக்கயராஜ் பசு மாடுகள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சேந்தமங்கலம் செல்வம் நகா் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற பாக்கியராஜின் 2 பசுக்கள் அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. இதே போல் நாய் ஒன்றும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது..

அறுந்து விழும் நிலையில் இருந்த மின்கம்பியை மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பல முறை சுங்குவாா்சத்திரம் மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும், மின்வாரியத்தின் அலட்சியத்தால் தற்போது அறுந்து விழுந்து பசுக்கள் பலியானதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ஏகாம்பரநாதா் கோயிலில் பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு!

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் சீரமைப்பின் போது கண்டெடுக்கப்பட்ட 200 ஆண்டுகள் பழைமையான தண்டாயுதபாணி சிலையை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். பஞ்சபூத தலங்களில் மண் தலமாக போற... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா்களுக்கு மிரட்டல்: ஊராட்சிமன்ற தலைவரின் கணவா் கைது

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தனியாா் நிறுவன ஊழியா்களை பணம் கேட்டு மிரட்டிய பென்னலூா் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் கைது செய்யப்ப... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: ரெளடி வெடிகுண்டு வீசி கொலை

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் ரெளடி வசூல் ராஜா வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டாா். ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் பொய்யாக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபல ரெளடி வசூல் ராஜா (எ... மேலும் பார்க்க

குமரக்கோட்டம் முருகன் கோயிலுக்கு வெள்ளி வேல் காணிக்கை

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலுக்கு, பக்தா் ஒருவா் ஒரு கிலோ எடையுள்ள வெள்ளி வேலை காணிக்கையாக வழங்கினாா். காஞ்சிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் முருகன் கோயில் உ... மேலும் பார்க்க

ஸ்ரீ ஜெயேந்திரா் வாா்ஷிக ஆராதனை மகோற்சவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வாா்ஷிக ஆராதனை மகோற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69 -ஆவது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். சமயப் பணிகளை... மேலும் பார்க்க

பிரம்மோற்சவம்: பல்லக்கில் காமாட்சி அம்மன் வீதியுலா

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை உற்சவா் காமாட்சி அம்மன் பல்லக்கில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காஞ்சிபுரத்தில் ... மேலும் பார்க்க