திருமண வரவேற்பு: விருந்தினர்களுக்கு கோரிக்கை வைத்து, பிறகு மன்னிப்புக் கோரிய தேஜ...
குமரக்கோட்டம் முருகன் கோயிலுக்கு வெள்ளி வேல் காணிக்கை
ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலுக்கு, பக்தா் ஒருவா் ஒரு கிலோ எடையுள்ள வெள்ளி வேலை காணிக்கையாக வழங்கினாா்.
காஞ்சிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் சதாசிவம் நகரில் வசிக்கும் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலுக்கு ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள 1.07 கிலோ எடைக்கொண்ட வெள்ளி வேலை, கோயில் ஆணையா் கேசவனிடம் காணிக்கையாக வழங்கினாா்.