தீவிரவாதிகளின் கூட்டளிகள் 2 பேர் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பண்டிபோரா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பண்டிபோரா மாவட்டத்தின் கந்த்பால் - ஹஜின் சாலையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க: வினாத்தாள் கசிவு! 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து: ராகுல் காந்தி
அப்போது, தீவிரவாதிகளின் கூட்டாளிகளான 2 பேர் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி, ஒரு ஏகே-47 ரக துப்பாக்கி, 2 கையெறி வெடி குண்டுகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.