ஆடையை அவிழ்த்தால் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? பாடகி சிவாங்கி கேள்வி!
நடிகை சிவாங்கி ஆடை சுதந்திரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடகராக பிரபலமடைந்தவர் சிவாங்கி. தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றார்.
டான் திரைப்படத்தில் நாயகி பிரியங்கா மோகனுக்கு தோழியாக நடித்திருந்தார். தற்போது, இசை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதையும் படிக்க: திருமண நிகழ்வில் நடனமாடி அசத்திய சாய் பல்லவி!
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய சிவாங்கி, “எனக்குக் குட்டையான துணிகளை அணிவதில் தயக்கம் இருந்தது. ஆனால், அண்மையில் பயணத்தின்போது அவற்றை அணிய ஆரம்பித்தேன். இப்போது, அவற்றை விரும்பி தன்னம்பிக்கையுடன் அணிகிறேன். அந்த ஆடைகளை அணிந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டால், இந்தப் பெண் வாய்ப்புக்காக ஆடையை அவிழ்த்து காட்டுகிறது என்கின்றனர்.

வாய்ப்பு வேண்டுமென்றால், ஆடிசன் செல்ல வேண்டும்; நடிப்பில் விருப்பம் உள்ளதை தெரிவிக்க வேண்டும்; ஆனால், இவர்கள் அவிழ்த்துப் போட்டால் வாய்ப்பு கிடைத்துவிடும் என நினைக்கின்றனர். ஆடை என்பது ஒருவரின் விருப்பம் என்பதை எப்போது புரிந்துகொள்வார்கள் எனத் தெரியவில்லை” என அதிரடியாக பேசியுள்ளார்.