செய்திகள் :

பராசக்தியில் பாசில் ஜோசஃப்?

post image

நடிகர் பாசில் ஜோசஃப் பராசக்தி படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் பராசக்தி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கை தலைநகர் கொழும்புவில் துவங்கியுள்ளது.

இங்கு, மதுரை ரயில் நிலையம் சார்ந்த காட்சிகள் மற்றும் தில்லியில் நடக்கும் காட்சிகள் படமாக்கப்படுவதாகத் தெரிகிறது. இதற்காக, தமிழில் ‘இந்தி வாழ்க’ மற்றும் ‘டெல்லி ரயில் நிலையம்’ என பெயர் பொறிக்கப்பட்ட பழையகால பேருந்து ஒன்றையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: டெஸ்ட் - சித்தார்த் அறிமுக விடியோ!

இந்த நிலையில், மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான பாசில் ஜோசஃப் இப்படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, பல நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் நடித்து வரும் வேளையில் பாசில் ஜோசஃப், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நடிகர்கள் பராசக்தியில் இணைந்தது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதையான காதல் என்பது பொதுவுடமை படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் நாளை(மார்ச் 14) வெளியாக... மேலும் பார்க்க

நாளை திரையரங்குகளில் வெளியாகும் 10 தமிழ் படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகளில் 10 தமிழ் படங்கள் வெளியாகவுள்ளது. நாளை(மார்ச் 14) எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காண்போம்.இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்து இருக்கும் திரைப்... மேலும் பார்க்க

பெனால்டியில் நடுவரின் தவறான முடிவு: ஸ்பெயின் ஊடகங்கள் கடும் விமர்சனம்..!

சாம்பியன்ஸ் லீக்கில் முக்கியமான போட்டியில் பெனால்டி குறித்த முடிவு சர்ச்சையாகியுள்ளது.சாம்பியன்ஸ் லீக்கில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அத்லெடிகோ மாட்ரிட் ரியல் மாட்ரிட் உடன் மோதியது. 1-0 என முன்னிலை வகிக... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் லீக்கில் புதிய சாதனை படைத்த கிம்மிச்..!

சாம்பியன்ஸ் லீக்கில் (யுசிஎல்) பயர்ன் மியூனிக் அணி வீரர் ஜோஷுவா கிம்மிச் புதிய சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் ரவுனண்ட் ஆஃப் 16 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இதில் 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிப் பெற... மேலும் பார்க்க

ஸ்ரீசைலம் கோயிலில் சாமி தரிசனம் செய்த ராஷி கண்ணா..!

ஆந்திரத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோயிலில் நடிகை ராஷி கண்ணா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.தனது இன்ஸ்டா பக்கத்தில் குடும்பத்தினருடன் கோயிலில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து... மேலும் பார்க்க

ஆலங்குடி குருபரிகார கோயிலில் 1008 சங்காபிஷேகம்!

நீடாமங்கலம்: நவக்கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபகவானுக்கு 1008 சங்காபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.இக்கோயில் திருஞானசம்ம... மேலும் பார்க்க