ஆடு மேய்ப்பதில் தகராறு; வயதான தம்பதியை வெட்டிக் கொன்ற உறவினர் கைது; திருப்பூரில்...
ஸ்ரீசைலம் கோயிலில் சாமி தரிசனம் செய்த ராஷி கண்ணா..!
ஆந்திரத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோயிலில் நடிகை ராஷி கண்ணா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
தனது இன்ஸ்டா பக்கத்தில் குடும்பத்தினருடன் கோயிலில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “ஸ்ரீசைலம் கோயில், ஹரஹரமகாதேவ்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ராஷி கண்ணா இந்த வருடம் பல சுவாரசியமான படங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
அரண்மனை 4, தி சபர்மதி ரிப்போர்ட் , அகத்தியா படங்களில் நடித்திருந்தார். கடைசியாக பான் இந்திய படமாக பிப்.28ஆம் தேதி வெளியான அகத்தியா கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
பர்ஸி முதல் பாகத்தில் ராஷி கண்ணா ஆர்பிஐ வங்கி அலுவலராக இருப்பார். பின்னர் கள்ள நோட்டு ஒழிப்பு பிரிவில் சேர்வார்.
நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடரின் அடுத்த பாகத்தில் நடிக்கவிருக்கிறார். ஆனால், இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
