TASMAC: "டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி ஊழல்" - குற்றச்சாட்டுகளை அடுக்கும் அமலாக்கத...
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிடும் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
மார்க் வுட்டுக்கு காயம்
அண்மையில் நிறைவடைந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது, இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட்டுக்கு காயம் ஏற்பட்டது.
இதையும் படிக்க:டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாட விரும்பும் கே.எல்.ராகுல்!
மார்க் வுட்டுக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டபோது, அவருக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டிருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. அதனால், குறைந்தது அடுத்த 4 மாதங்களுக்கு அவரால் கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
We can provide an update on Mark Wood’s fitness following surgery.
— England Cricket (@englandcricket) March 13, 2025
Read more
இங்கிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வருகிற ஜூன் மாதம் முதல் விளையாடவுள்ளது. இந்தத் தொடர் முழுவதும் மார்க் வுட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவர் மீண்டும் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க:லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கவுள்ள ஆஸி. ஆல்ரவுண்டர்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நவம்பரில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.