Immigration and Foreigners Bill: குடியேறிகளுக்குப் புதிய மசோதா கொண்டு வந்த பாஜக ...
லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கவுள்ள ஆஸி. ஆல்ரவுண்டர்!
பிரபல ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடவுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது.
பேட்ஸ்மேனாக மட்டும்...
விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ், இந்த சீசனில் பேட்டிங் மட்டும் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: எதுவும் நல்ல விதத்தில் முடிவதில்லை: ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர்!
ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டனான மிட்செல் மார்ஷ் விரைவில் ஐபிஎல் தொடருக்காக லக்னௌ அணியில் இணையவுள்ளார். காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடாத மிட்செல் மார்ஷ், தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார்.
காயத்திலிருந்து மீண்டுள்ள மிட்செல் மார்ஷ் லக்னௌ அணிக்காக முன்வரிசையில் இம்பாக்ட் வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்ரவுண்டரான மார்ஷ், இந்த சீசனில் பந்துவீச்சில் ஈடுபட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ரோஹித் சர்மா ஏன் ஓய்வு பெறவேண்டும்?: ஏபிடி வில்லியர்ஸ்
கடந்த 3 சீசன்களாக தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய மிட்செல் மார்ஷ், அடிக்கடி காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக வெறும் 4 போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடினார்.
கடந்த ஆண்டு துபையில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் மிட்செல் மார்ஷ் ரூ.3.40 கோடிக்கு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.