செய்திகள் :

ஆணவக்கொலை: காதல் விவகாரத்தில் மகளின் கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை!

post image

குஜராத்தில் வேறு சாதியைச் சேர்ந்த நபரைக் காதலித்ததற்காக மகளின் கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.

குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீபக் ரத்தோட். இவரது மனைவி உயிரிழந்துவிட்டார். தீபக் ரத்தோட் சமீபத்தில் தனது மகள் வேறு சாதியைச் சேர்ந்தவரைக் காதலிப்பது தெரிந்ததால் கோபத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், 19 வயதேயான தனது மகளை அவரின் இளைய மகள் முன்னிலையில் கழுத்தை நெறித்துக் கொன்றார். காதலித்தால் உனக்கும் இதே கதி என்று அந்தப் பெண்ணையும் மிரட்டியுள்ளார்.

பின்னர் தனது சகோதரர் லால்ஜி ரத்தோட் உதவியுடன் கிராமத்து மயானத்தில் யாருக்கும் தெரியாமல் தகனம் செய்தார். மனைவியின் உறவினர்கள் அந்தப் பெண் குறித்து விசாரித்தபோது விஷம் குடித்ததாகத் கூறினார். இதனால் அவர்மீது சந்தேகம்கொண்ட உறவினர்கள் காவல்துறையில் புகாரளித்தனர்.

இதையும் படிக்க | ஆர்எஸ்எஸ் ஒழிக! கோஷமிட்ட காந்தியின் கொள்ளுப் பேரன்! என்ன நடந்தது?

காவல்துறையினர் விசாரித்ததில் அவர் தனது 19 வயது மகளைக் கொலை செய்தது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஆணவக்கொலை செய்த தீபக் ரத்தோட் மற்றும் அவரது சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.

ஹோலி பண்டிகை: ஹிந்தி தேர்வெழுதாத மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு! -சிபிஎஸ்இ

ஹோலி பண்டிகை காரணமாக ஹிந்தி தேர்வெழுதாத 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படுமென்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.ஹோலி பண்டிக்கையைப் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 15 ஆம் தேதி நடைபெறவிருக்க... மேலும் பார்க்க

நிறுவப்பட்டு 2 நாள்களில் திருடுபோன அம்பேத்கர் சிலை !

மத்தியப் பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டு 2 நாள்களில் திருடு போன சம்பவம் நடைபெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டதில் உள்ள பாரி கிராமத்தில் இரு நாள்களுக்கு முன் அம்பேத்கர் சிலை... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் 76 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகத் தகவல்!

ஜம்மு - காஷ்மீரில் செயல்பாட்டில் உள்ள 76 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் அதில் 59 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு - காஷ்மீரில் கடந்தாண்டு 91 பயங்கரவாதிகள் செ... மேலும் பார்க்க

ஹோலி: வட மாநிலங்களில் திரையிட்டு மூடப்படும் மசூதிகள்! என்ன நடக்கிறது?

ஹோலி பண்டிகை நாளை (மார்ச் 14) கொண்டாடப்படவுள்ள நிலையில், பிகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் உள்ள மசூதிகள் தார்பாய்களால் மூடப்பட்டு வருகின்றன.நாடு முழுவதும் மார்ச் 1 முதல் 31 வரை ரம்ஜான் மாதமாக இஸ்லாம... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் ஒழிக! கோஷமிட்ட காந்தியின் கொள்ளுப் பேரன்! என்ன நடந்தது?

கேரளத்தில் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்திக்கு எதிராக ஆர்எஸ்எஸ், சங் பரிவார் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். கேரளத்தில் வர்க்கலாவிலுள்ள சிவகிரி மடத்தின் அழைப்பின் பேரில் ஸ்ரீ நாராயண குரு மகாத்... மேலும் பார்க்க

வினாத்தாள் கசிவு! 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து: ராகுல் காந்தி

வினாத்தாள் கசிவுகளால் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.இளநிலை நீட் நுழைவுத் தேர்வு, யுஜிசி நெட் தே... மேலும் பார்க்க