செய்திகள் :

மதுரை: எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம்; அனுமதித்த உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்; பின்னணி என்ன?

post image

எச்சில் இலையில் உருளுவது வழிபாட்டு முறையாக இருப்பினும், அது சுகாதாரத்திற்கும், மனித மாண்புக்கும் உகந்தது அல்ல என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

கரூர் மாவட்ட நிர்வாகம், அனைத்து சாதி அர்ச்சக மாணவர் சங்கத் தலைவர் அரங்கநாதன், கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில், "கரூர் மாவட்டம் நேரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், அவர்கள் உண்ட எச்சில் இலையில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்யவும் அனுமதிக்கக் கோரி மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த மே 18 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் அவ்வாறு அங்கப்பிரதட்சணமும் செய்யப்பட்டது.

2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இதுபோல பக்தர்கள் உண்ட எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் அனுமதி மறுக்கப்பட்டது.  ஆனால், மனுதாரர் நீதிமன்றத்தில் பழைய உத்தரவுகளை மறைத்து, தங்களுக்குச் சாதகமான உத்தரவைப் பெற்று விட்டனர். இந்த உத்தரவு பலராலும் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே பக்தர்கள் உணவு உண்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிற்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இலையில் அங்கப்பிரதட்சணம்

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வின் முன் ஏற்கனவே விசாரணை செய்யப்பட்டு இறுதித் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
 
இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ ஆஜராகி, தனி நீதிபதியின் உத்தரவு தவறானது, பல உத்தரவுகளை மறைத்துப் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவிற்குத் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வு, வழக்கினைத் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்த நிலையில் இன்று, "எச்சில் இலையில் உருளுவது வழிபாட்டு முறையாக இருப்பினும், அது சுகாதாரத்திற்கும், மனித மாண்புக்கும் உகந்தது அல்ல. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இது போன்ற நிகழ்வுகளுக்குத் தடை விதித்துள்ளது. ஆகவே பக்தர்கள் உணவருந்திய எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அது போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது" என உத்தரவிட்டனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ்' - 3 யூடியூப்பர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே ரீல்ஸ் எடுப்பதாக கூறி, 15 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வீடியோபதிவு செய்த புகாரில் தஞ்சாவூரை சேர்ந்த யூடியூப்பர் திவ்யா(வயது 36), ஈரோட்டை சேர்ந்த கீழக்... மேலும் பார்க்க

``தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும்?'' - உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெறாதாவரை பணியில் சேர்க்க தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவிற்கு தடை கோரி மின்வாரிய தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரைக் க... மேலும் பார்க்க

`ஆளுநர் ஏன் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார்?’ - ராஜேந்திர பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் தொடங்கி, முக்கியமான சட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி கோரி அனுப்பி வைக்கும் கடிதங்கள் வரை நிலுவையில் போட்டு வைப்ப... மேலும் பார்க்க

``நீண்ட கால லிவ் இன் உறவில், ஆண் மீது பாலியல் வன்கொடுமை புகார் கூற முடியாது'' -சுப்ரீம் கோர்ட்

சமீப காலமாக லிவ் இன் உறவில் வாழும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி வாழும்போது அவர்களுக்குள் அனைத்து வகையான உறவுகளும் நடைபெறுகிறது. ஆனால் திடீரென அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்... மேலும் பார்க்க

`சிவாஜி கணேசனின் வீட்டில் எனக்கு எந்த பங்கும் இல்லை’ - ஜப்தி உத்தரவுக்கு எதிராக ராம்குமார் பதில்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லாத நிலையில், அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமார் தரப்ப... மேலும் பார்க்க

`ஜகஜால கில்லாடி' படத்துக்காக கடன் : `சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு’ - உயர் நீதிமன்றம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர... மேலும் பார்க்க