செய்திகள் :

`சிவாஜி கணேசனின் வீட்டில் எனக்கு எந்த பங்கும் இல்லை’ - ஜப்தி உத்தரவுக்கு எதிராக ராம்குமார் பதில்

post image

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லாத நிலையில், அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரின் மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் `ஜகஜால கில்லாடி’ என்ற படத்தை தயாரித்தனர். பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.

இந்த கடனை திருப்பி செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை செலுத்த ஏதுவாக `ஜகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி மத்தியஸ்தர் கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் தேதி உத்தரவிட்டார்.

ராம் குமார்

இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்காததை அடுத்து, மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், போதுமான அவகாசம் வழங்கியும் பதில்மனு தாக்கல் செய்யாததால், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ராம்குமார் தரப்பில், சிவாஜி கணேசனின் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை. தனது சகோதரர் நடிகர் பிரபு பெயரில் உள்ளது. ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுசம்பந்தமாக மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, உரிமையாளராக இல்லாவிட்டால் எப்படி ஜப்தி செய்ய முடியும் எனக் கூறி, ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்ய அனுமதியளித்ததுடன், பதில் மனுவும் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

செய்திகளின் மூலம் தான் இந்த வீடு சிவாஜி கணேசனின் வீடு என தெரிந்து கொண்டதாக தெரிவித்த நீதிபதி, பிரச்னைக்கு தீர்வு காண முயற்சிக்கும்படி அறிவுறுத்தி, விசாரணையை ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``நீண்ட கால லிவ் இன் உறவில், ஆண் மீது பாலியல் வன்கொடுமை புகார் கூற முடியாது'' -சுப்ரீம் கோர்ட்

சமீப காலமாக லிவ் இன் உறவில் வாழும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி வாழும்போது அவர்களுக்குள் அனைத்து வகையான உறவுகளும் நடைபெறுகிறது. ஆனால் திடீரென அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்... மேலும் பார்க்க

`ஜகஜால கில்லாடி' படத்துக்காக கடன் : `சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு’ - உயர் நீதிமன்றம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர... மேலும் பார்க்க

PM Modi: ``பட்டப்படிப்பு சான்றிதழை பொதுவில் வெளியிட முடியாது.." - நீதிமன்றத்தில் பல்கலைக் கழகம்!

பிரதமர் மோடியின் BA, MA பட்டப் படிப்பு சான்றிதழ் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 2016-ம் ஆண்டு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த அமித் ஷா, பிரதமர் மோடியின் பட்ட... மேலும் பார்க்க

திரௌபதி அம்மன் கோயில் விவகாரம்: `அனைத்து தரப்பினருக்கும் அனுமதி; அதேசமயம்...' - நீதிமன்றம் உத்தரவு!

விழுப்புரம் மாவட்டம், வளவனூருக்கு அருகே மேல்பாதி கிராமம் அமைந்துள்ளது . இங்கு சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான அருள்மிகு தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஊரின் மையப் பகுதியில் அமைந்த... மேலும் பார்க்க

ஈஷா:`மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறதா?’ - அறிக்கை கேட்கும் ஹைகோர்ட்

ஈஷா யோகா மையம் நடத்தவுள்ள மகாசிவராத்திரி நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து கோவையை சேர்ந்த சிவஞானன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அதில், வெள்ளியங்கிரி மலை அடிவ... மேலும் பார்க்க

Breath Analyzer: `மது பரிசோதனை செய்யும் ப்ரீத் அனலைசர் இனி செல்லாது' - பாட்னா உயர்நீதிமன்றம்

ப்ரீத் அனலைசர் மூலம் கிடைக்கும் தகவல் உறுதியான ஆதாரம் கிடையாது என்று பாட்னா உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டு வதாலேயே அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. அதனால்... மேலும் பார்க்க