செய்திகள் :

"கணவர் நாசர் பிறந்தநாளுக்குக் கிடைக்கிற பெரிய கிஃப்ட்டே இதான்!" - கமீலா நாசர் கலகல பேட்டி

post image

மிரள வைக்கும் வில்லாதி வில்லன்... சென்டிமென்டால் ஆரத்தழுவ வைக்கும் பெருங்குணச்சித்திரன்... மனம் விட்டுச் சிரிக்கவைக்கும் காமெடியன்... என எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அப்படியே அந்த 'அவதாரம்' எடுத்துவிடும் அற்புத கலைஞர் நாசர்.

"பொம்பள சோக்கு கேக்குதா?" என 'எம்டன் மகன்' பட மீம்ஸ்களால் இப்போதும் 2கே கிட்ஸ்களின் லைம் லைட்டில் இருப்பவர். நடிகர் சங்கத்தலைவர், திரை ஆளுமை எனத் தமிழ் திரையுலகில் பெருந்தடம் பதித்த நாசரின் 67-வது பிறந்தநாள் நேற்று. அதனையொட்டி கணவர் நாசரிடம் பிடித்த விஷயங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்து மனைவி கமீலா நாசரிடம் பேசினேன்.

"என் கணவர்கிட்டே பிடிச்ச விஷயங்களைக் கேட்குறீங்க. முதல்ல பிடிக்காத விஷயத்தைப் பட்டியல் போட்டுடறேன்" எனக் கண் சிமிட்டியபடி பேசத்தொடங்கினார்.

நாசர் குடும்பம்

"அவர் ரொம்ப எளிமை. முன்னாடியெல்லாம் எங்கப் போனாலும் காலுல செருப்பு போடாமத்தான் போவார். தன்னை கேர் பண்ணிக்கவே மாட்றாரேன்னு எனக்கு கோவம்லாம் வந்திருக்கு. எல்லோரும் சொல்லிச் சொல்லி இப்போதான், செருப்பு போட ஆரம்பிச்சிருக்கார். அதுவும், இன்னும் முழுசா மாறல. அதேமாதிரி, சமையல் நல்லாருந்தாலோ பிடிச்ச உணவுன்னாலோ அதிகமா சாப்பிட்டுடுவார். ஃபுட் கன்ட்ரோல் கிடையாது. அதையும், அவர் கன்ட்ரோல் பண்ணிக்கணும்.

அடுத்ததா, ஏதாவது, எழுதிக்கொடுக்கிறேன்னு சொல்லிட்டு ரொம்ப லேட் பண்ணுவார். 'ஜி அத சீக்கிரம் முடிச்சிடுங்க' அப்படின்னு பலமுறை நினைவூட்டினாத்தான் முடிச்சுக்கொடுப்பார். இந்த மூணு விஷயங்கள்தான் அவர்கிட்டே எனக்குப் பிடிக்காதது. மத்த எல்லாமே பிடிச்ச விஷயங்கள்தான். அதனாலதான், முதல்ல பிடிக்காத விஷயங்களைப் பேசிடலாம்னு சொன்னேன்" என்று சஸ்பென்ஸை உடைத்துவிட்டு தொடர்கிறார்.

"எங்களோடது காதல் திருமணம். சமீபத்துலதான், 36-வது திருமண நாளை சந்தோஷமா கொண்டாடினோம். திருமண நாள், பிறந்தநாள் எதுவா இருந்தாலும் ரொம்ப சிம்பிளா கொண்டாடுறதுதான் எங்களோட ஸ்டைல். சின்னதா ஒரேயொரு பீஸ் கேக்கை வெட்டி அன்பைப் பறிமாறிக்குவோம். எல்லா வருடமும் எங்க எல்லோரோட பிறந்தநாள் கொண்டாட்டமும் இப்படித்தான் இருக்கும். மற்றபடி, அவர் வெளியூர் போனா, ரொம்பப் பிடிச்சிருந்தா நூல் சேலை, வீட்டுக்குத் தேவையான டவல், கத்தரிக்கோல், அழகான கத்தி, பீங்கான் பொருட்கள் வாங்கிட்டு வருவார்.

அதுவும், சர்ப்ரைஸ் எல்லாம் இருக்காது. எனக்குப் பத்து தடவை ஃபோன் போட்டு நல்லாருக்கா பாருன்னு ஃபோட்டோவை அனுப்பிட்டுத்தான் வாங்கிட்டு வருவார். சர்ப்ரைஸ்னா என்னன்னே தெரியாத கணவர்கிட்ட, என்னோட பிறந்தநாள், திருமண நாளுக்கு எதையும் எதிர்பார்க்கிறதில்ல. எதிர்பார்த்தா ஏமாற்றம்தான் மிஞ்சும். அதனால, நான் எதிர்பார்க்கவே மாட்டேன்.

நாசர் குடும்பம்

குறிப்பா, அவர், கிஃப்ட் கொடுக்காததே எனக்குப் பெரிய கிஃப்டுதான். மைண்ட் வாய்ஸ்னு நினைக்காதீங்க. வெளிப்படையாத்தான் பேசுறேன்" என்று சொல்லி சிரிப்பவரிடம், "உங்க குமுறல் எல்லாம் நியாயமானதுதான் மேடம். சாரோட பிறந்தநாள் எப்படிப் போச்சு? அவருக்கு நீங்க என்ன கிஃப்ட் கொடுத்தீங்க?" என்றோம். "அவரோட பிறந்தநாளுக்கு நானும் கிஃப்ட் கொடுக்கமாட்டேன். அவரும் கொடுக்கமாட்டார். அதுதான், எங்க ரெண்டு பேரோட ஸ்பெஷல். அதேமாதிரி, ஷூட்டிங் பிஸினால திருமண நாள், பிறந்தநாள் எல்லாத்தையுமே மறந்துடுவார். நான்தான் எல்லாத்தையும் நினைவூட்டுவேன். அப்படியான்னு கேட்டு குழந்தைத்தனமா சிரிப்பார். அந்த சிரிப்பே எல்லாத்தையும் கூல் பண்ணிடும்.

இந்த பிறந்தநாள் பிறந்த டைம்ல ரெண்டு பேரும் பறந்துட்டிருந்தோம்னுதான் சொல்லணும். அதாவது, மும்பைலிருந்து விமானத்துல வந்துக்கிட்டிருந்தோம். நைட் ரெண்டு மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தோம். டயர்ட்னால பகல்லயும் நல்லா தூங்கினார். இடையிடையே பிறந்தநாள் வாழ்த்துகளையும் ஃபோன்ல ரிசீவ் பண்ணிக்கிட்டிருந்தார். மாலை 6 மணிக்கு ஷூட்டிங் கிளம்புறதுக்கு முன்னாடி, என் கடைசி பையன் அபி ஹாசன் விருப்பத்துக்காக, வழக்கம்போல சின்ன கேக் வெட்டி அன்பைப் பரிமாறிக்கிட்டோம். அவ்ளோதான்.

பொதுவா, பிறந்தநாளை பிள்ளைங்களோட சந்தோஷமா கொண்டாடுறதே பெரிய கிஃப்ட்தான். அதுவும், அவருக்கு மட்டன் பிரியாணி ரொம்பப் பிடிக்கும். பிரியாணி செஞ்சு மகன்களோட ஒண்ணா அமர்ந்து சாப்பிடுற சந்தோஷத்தை வேற எதுவும் கொடுத்துடாது. அவரும் அதைத்தான் விரும்புறார்.

கமீலா நாசர்

பொதுவா, மத்த வீட்ல பிறந்தநாளை மறந்தாலோ, கொண்டாடாம இருந்தாலோ சண்டையெல்லாம் வரும். பேசாமல்லாம் இருப்பாங்க. எங்க வீட்ல ஒருநாளும் அப்படி நடந்தது கிடையாது. ரெண்டு பேருமே கூல் கப்பிள்ஸ்" என்று கேஷுவலாக பேசுபவரிடம், "திருமணமானதிலிருந்து இப்போதுவரை நாசர் சார் மாற்றிக்காத விஷயம்னா என்ன?" என்றோம். "ரெண்டு பேருக்கும் எளிமையா உடை அணிவதுதான் பிடிக்கும். எவ்ளோ பெரிய பிரபலங்களோட இல்ல நிகழ்வுக்குப் போனாலும் அந்த எளிமையை இப்போவரைக்கும் கடைபிடிக்கிறோம்" என்கிறார் நிதானமாக.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டினார்' - நடிகர் பாலா மீது முன்னாள் மனைவி புகார்!

கேரள மாநிலம், கொச்சியில் வசித்துவரும் நடிகர் பாலா, தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் நடித்துள்ளார். இவர் 2019-ம் ஆண்டு அம்ருதா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா ... மேலும் பார்க்க

`சிறகடிக்க ஆசை தமிழில் மட்டுமல்ல; இந்தியிலும்..!' - FICCI கருத்தரங்கில் விகடன் மேலாண் இயக்குநர்

சென்னையில் நடந்து வரும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கருத்தரங்கில் 'பவர் ஆஃப் டிவி இன்‌ சவுத்' என்ற தலைப்பில் விகடன்‌ குழும மேலாண் இயக்குநர் ... மேலும் பார்க்க

`அமலாக்கத்துறை என்னையும் விசாரிச்சது' - ஆரூர் தமிழ்நாடன்; ED நடவடிக்கைக்கு ஷங்கர் பதில்

இயக்குநர் ஷங்கருக்குச்சொந்தமான சுமார் ரூ.10.11 கோடி மதிப்பிலான மூன்று அசையாச் சொத்துகளை முடக்கி உத்தரவிட்டிருக்கிறது அமலாக்கத்துறை.இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டிருக்கிற அறிக்கையில், எழுத்தாளர் ... மேலும் பார்க்க

ஏஞ்சல்: `படத்தை நிறைவு செய்ய கால்ஷீட் தராமல்.!' - உதயநிதி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

`ஏஞ்சல்' படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுக்காததால், 25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி பட தயாரிப்பாளர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்... மேலும் பார்க்க