செய்திகள் :

டி20 சாம்பியன்-ஷிப் தொடர்: பாபர் அசாம், நசீம் ஷா விலகல்!

post image

தேசிய டி20 சாம்பியன்-ஷிப் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மற்றும் நசீம் ஷா இருவரும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடத்தப்பட்டது. இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடத்தப்பட்டன. மைதான பராமரிப்புகளுக்காக ரூ.1800 கோடி செலவு செய்த பாகிஸ்தான் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றிபெற்று தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது.

இதனால், பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டனர். நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் டி20 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதையும் படிக்க: டி20 தொடருக்காக நியூசிலாந்து சென்றடைந்த பாகிஸ்தான் அணி!

இதில், முன்னாள் கேப்டன் பாபர் அசாம், தற்போதைய கேப்டன் முகமது ரிஸ்வான், வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா உள்பட அனைவரும் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

அந்த அணியை அறிவிக்கும் போது மத்திய ஒப்பந்தத்தில் இருக்கும் இந்த வீரர்கள் ஃபைசலாபாத்தில் தேசிய டி20 சாம்பியன்-ஷிப் தொடரில் விளையாடுவார்கள் என்று சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த நிலையில், வரவிருக்கும் போட்டிகளைக் கருத்தில் கொண்டு, பாபர் அசாம், நசீம் ஷா இருவரும் தேசிய டி20 சாம்பியன்-ஷிப் தொடரில் இருந்து விலகியுள்ளதை உறுதிபடுத்தியுள்ளது.

இவர்கள் போட்டியில் இருந்து விலகியிருப்பது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் பிஎஸ்எல் போட்டிக்காகத்தான் இருக்கும் என்று மூத்த வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாபர் அசாம் 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் தரப் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: எதுவும் நல்ல விதத்தில் முடிவதில்லை: ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிடும் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்... மேலும் பார்க்க

டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாட விரும்பும் கே.எல்.ராகுல்!

டாப் ஆர்டரில் களமிறங்கி நன்றாக விளையாடுவது தனக்கு இயல்பாக வருவதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் வழக்கமாக 5-வத... மேலும் பார்க்க

டி20 தொடருக்காக நியூசிலாந்து சென்றடைந்த பாகிஸ்தான் அணி!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்கான பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றடைந்தது.பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிக... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் சையத் அபித் அலி காலமானார்!

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்ரவுண்டர் சையத் அபித் அலி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.ஆல்ரவுண்டரான சையத் அபித் அலி ஃபீல்டிங்கிக்கு பெயர் பெற்றவர். இவர் 1967 ஆம் ஆண்டு அடிலெய்டில் ந... மேலும் பார்க்க

லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கவுள்ள ஆஸி. ஆல்ரவுண்டர்!

பிரபல ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடவுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சா... மேலும் பார்க்க

எதுவும் நல்ல விதத்தில் முடிவதில்லை: ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர்!

வங்கதேச வீரர் மஹ்மதுல்லா (39) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். மஹ்மதுல்லா வங்கதேசத்தில் அதிகமாக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 4ஆவது இடத்தில் இருக்கிறார். அனைத்து ஐசிசி தொடர... மேலும் பார்க்க