செய்திகள் :

காட்பாடி: லைசென்ஸ் இல்லாத பிஸ்டல்; ஃபைனான்ஸியரின் முதுகை துளைத்த புல்லட் - நடந்தது என்ன?

post image

வேலூர், காட்பாடி அருகேயுள்ள கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஃபைனான்ஸியர் அருள்சுடர். இவர், காட்பாடி காந்தி நகரில் உள்ள ஆதிலட்சுமி தெய்வசிகாமணி திருமண மண்டபம் அருகே அலுவலகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அருள்சுடரின் நண்பர் காட்பாடி வி.ஜி.ராவ் நகரைச் சேர்ந்த ஜான்சன். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்ளும்போது மது அருந்துவார்களாம். நேற்று முன்தினம் (மார்ச் 11) இரவு 9 மணிக்குமேல், இருவரும் அமர்ந்து மது குடித்துகொண்டிருந்தார்களாம். போதை தலைக்கேறிய பிறகு உளறி பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

Representational image

அப்போது, அருள்சுடர் மறைத்து வைத்திருந்த தனது கைத்துப்பாக்கியை எடுத்து ஜான்சனிடம் காண்பித்திருக்கிறார். லைசென்ஸ் இல்லாத பிஸ்டல் வகை துப்பாக்கி அது. சட்டவிரோதமாக கைத்துப்பாக்கியை வாங்கி வைத்திருப்பதை சொல்லி, ஜான்சனிடம் கொடுத்துள்ளார் அருள்சுடர். இருவருமே போதையில் இருந்ததால் துப்பாக்கியில் புல்லட் கார்ட்ரிட்ஜ் பகுதிக்கு ஏறியதை கவனிக்காமல் விளையாடியிருக்கின்றனர். துப்பாக்கியை பயன்படுத்த தெரியாத ஜான்சன் கையில் வைத்து சுழற்றியதாகவும் கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததாகவும், அதில் இருந்து புல்லட் வெளியேறி எதிரே இருந்த அருள்சுடரின் முதுகை துளைத்ததாகவும் கூறப்படுகிறது. இருவரும் நண்பர்கள் என்பதாலும், உரிமம் இல்லாத துப்பாக்கி என்ற காரணத்தினாலும் காவல்துறையினரிடம் தெரிவிக்காமல் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள் தனியார் மருத்துவமனைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

Representational image

கூர்மையான கம்பி குத்திவிட்டதாக கதை அளந்து புல்லட்டை அகற்றுவதற்கான முயற்சியும் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து காவல் துறை உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரியவர... உடனடியாக களத்தில் இறங்கியது எஸ்.பி தனிப்படை. ஜான்சனை பிடித்து, மறைத்து வைக்கப்பட்ட உரிமம் இல்லாத கைத்துப்பாக்கியும் இன்று கைப்பற்றப்பட்டிருக்கிறது. விருதம்பட்டு காவல் நிலையத்தில் வைத்து ஜான்சனிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தால், காட்பாடி பகுதி பதறிப்போய் பரபரப்பாக காணப்படுகிறது.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

ஆடு மேய்ப்பதில் தகராறு; வயதான தம்பதியை வெட்டிக் கொன்ற உறவினர் கைது; திருப்பூரில் கொடூரம்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊஞ்சல்பாளையம் சாலை பெரியதோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (80). இவரது மனைவி பருவதம் (72). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். இ... மேலும் பார்க்க

சென்னை: ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை - மருத்துவர் எடுத்த விபரீத முடிவுக்கு என்ன காரணம்?

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் பாலமுருகன் (53). இவர் சென்னை திருமங்கலத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரின் மனைவி சுமதி. இவர் வழக்கறிஞராக உள்ளார். இந்தத் தம்பதி... மேலும் பார்க்க

பார்க்கிங் பிரச்னை; விஞ்ஞானியை அடித்துக் கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்கள்... மொகாலியில் அதிர்ச்சி!

மொகாலியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேசன் மற்றும் ரிசர்ச் மையத்தில் டாக்டர் அபிஷேக் (39) என்பவர் விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் ஸ்விட்சர்லா... மேலும் பார்க்க

குஜராத்: மாணவர்கள் உட்பட 7 பேர்: 18 மாதங்களாக தொடர் பாலியல் வதை - கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை!

குஜராத் மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 18 மாதங்களாக 7 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த 18 ... மேலும் பார்க்க

திருப்பூர்: தோட்டத்து வீட்டில் வசித்த தம்பதி அடித்துக் கொலை - ஆதாயக் கொலையா? - போலீஸார் விசாரணை!

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊஞ்சப்பாளையம் சாலை பெரிய தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (82). இவரது மனைவி பருவதம் (75). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்களது மகன், மகள் இருவரும் தி... மேலும் பார்க்க

சென்னை: குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் - கடன் தொல்லை? ; விசாரித்து வரும் காவல்துறை

சென்னை திருமங்கலத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருமங்கலம் 7-வது சாலையில் வசித்தவர்கள் மருத்துவர் பாலமுருகன் - வ... மேலும் பார்க்க