Tushar Gandhi: காந்தியின் பேரனை மறித்து கோஷம்; ஆர்எஸ்எஸ்-பாஜக நிர்வாகிகள் மீது வ...
அரசுப் பேருந்து மோதி தினமணி செய்தியாளர் பலி
மதுரை: மதுரை- மேலூர் அருகே அரசுப் பேருந்து மோதி தினமணி செய்தியாளர் தர்மராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்தவர் தர்மராஜ்(58). தினமணி நாளிதழில் மேலூர் பகுதிக்கு செய்தியாளராகப் பணியாற்றி வந்தார்.
பத்மஸ்ரீ விருது பெறவுள்ள பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு கல்லூரியில் பாராட்டு!
இந்த நிலையில்,மேலூரில் உள்ள அவரது வீட்டுக்கு வியாழக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.அப்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த தர்மராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேலூர் போலீசார், தர்மராஜின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மேலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.