ரஷிய ராணுவத்துக்கு வெடிகுண்டு பார்சல்களை அனுப்பிய நபர் கைது!
தமிழர் வடிவமைத்த ரூபாய் குறியீட்டை மாற்றியுள்ளது திமுக! - அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழர் வடிவமைத்த ரூபாய் குறியீட்டை திமுக அரசு மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
'திமுக அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இலச்சினையில், ரூபாய் அடையாளக் குறியீடு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த உதய் குமார் என்பவரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் குறியீடு, இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நமது ரூபாய்த் தாள்களில் இணைக்கப்பட்டுள்ளது.
உதய் குமார், முன்னாள் திமுக எம்எல்ஏவின் மகன். முதல்வரே, நீங்கள் எப்படி இவ்வளவு முட்டாளாக முடியும்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க | முதல்முறையாக ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை'யை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இலச்சினையில் மாற்றம்
2025-2026 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை(மார்ச் 14) காலை தாக்கல் செய்யவுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
தமிழ்நாடு அரசு, பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.
இந்நிலையில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இலச்சினையில் கடந்த ஆண்டுகளில் ரூபாய் குறியீடு இடம்பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு அதற்குப் பதிலாக 'ரூ' என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது.
தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இலச்சினையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தமிழுக்கு முக்கியத்துவம்! தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் 'ரூ' குறியீடு!