மதுரை: எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம்; அனுமதித்த உத்தரவை ரத்து செய்த உயர்நீதிம...
TN Budget 2025 LIVE : தேர்தலுக்கு முன்பான முழு பட்ஜெட்; `ரூ’ என மாறிய குறியீடு - இன்றே தொடங்கிய விவாதம்
மாறிய குறியீடு - கிளம்பிய விவாதம்!

இன்று தமிழக அரசு வெளியிட்ட பட்ஜெட் தொடர்பான அறிவிப்பில், ரூபாய்க்கான லோகோ-வுக்கு பதிலாக தமிழில் `ரூ’ என அச்சிடப்பட்டிருந்தது. இதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
17-ம் தேதி பட்ஜெட் மீதான விவாதம்!
பட்ஜெட் தாக்கல் நிகழ்வு முடிந்ததும், அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது, என்னென்ன அலுவல்களை எடுப்பது போன்றவைகள் குறித்து முடிவுவெடுக்கப்படும்.
சனிக்கிழமை , வேளாண்மை பட்ஜெட் தாக்கல் நடைபெறும். 17-ம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான் விவாதம் நடைபெறும். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதால், தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க அரசு அடுத்த ஆண்டு தேர்தலை சந்திப்பதற்கு முன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும் நிறைவு பட்ஜெட் இது. எனவே, இந்த பட்ஜெட் கூடுதல் கவனம் பெறுகிறது.
இந்த ஆட்சியின் இறுதி பட்ஜெட்:
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி முடிவடைந்தது. சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். காலை 9:30 மணிக்கு தொடங்கும் இந்த பட்ஜெட் தாக்கல் கூட்டத்தில் கடந்த ஆண்டுக்கான வரவு, செலவு, வாங்கிய கடன், கொடுத்த வட்டி போன்ற தகவல்களை தெரிவிக்கப்படும். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருப்பதால், இடைக்கால பட்ஜெட்டை மட்டும்தான் தாக்கல் செய்ய முடியும். அதனால், இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையிலான திட்டங்கள் இடம்பெற வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
மேலும், சென்னையில் இந்த பட்ஜெட்டை 100 இடங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.