`தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா... உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்!' - ஸ்டாலின் க...
NEP: `கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுங்கள்; கூட்டாட்சியை உடைத்து விடாதீர்கள்..!' - கேரள எம்.பி
மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையையும், அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கை பெயரிலான இந்தித் திணிப்பையும் எதிர்த்து தற்போது நடைபெறும் நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில் இன்று கூடிய மாநிலங்களவையில் கேரளா, சி.பி.ஐ (எம்) கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர். ஜான் பிரிட்டாஸ், மத்திய அரசு மாநிலங்களின் உரிமையைப் பறிக்கக் கூடாது என்றும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும் அழுத்தமாகப் பேசியிருக்கிறார். இது குறித்துப் பேசியிருக்கும் அவர், "இந்தியா பன்முகத்தன்மையால்தான் உயிர்கொண்டிருக்கிறது. அதை உடைக்க நினைத்தால் இந்தியாவின் கூட்டாச்சி உடைந்துபோகும். இந்தியாவில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டபோது உடனே 42வது திருத்தச் சட்டத்தின் படி கல்வி பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

அதேபோல இப்போது கல்வியைப் பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். மத்திய அரசு மாநிலங்களை மதிக்க வேண்டும். மாநிலங்களின் உரிமையைப் பறிக்கக் கூடாது. இந்தியாவில் மொத்தம் 1074 பல்கலைக்கழங்கள் இருக்கின்றன. அதில் கிட்டத்தட்ட 54 பல்கலைக்கழங்கள் மத்திய அரசின் கீழ் இயங்குகின்றன. சில தனியார் பல்கலைக்கழங்களும் இதில் அடங்கும். மற்றவையெலாம் மாநிலங்களுடையது. மாநிலங்களின் உழைப்பில், வியர்வையில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழங்களை மத்திய அரசு தன் கையில் எடுத்துக் கொள்ள வேண்டுமா? இதுதான் இந்த அரசின் நேர்மையா?
இந்தியாவின் எல்லா மொழிகளையும் நாங்கள் மதிக்கிறோம். இந்திக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். ஆனால், ஒரே தலைவர், ஒரே கட்சி, ஒரே மதம், ஒரே மொழி போன்ற உங்களின் கொள்கைகள் இந்தியாவின் கூட்டாச்சியை உடைத்து, நாட்டின் முடிவுரையை எழுத வழிவகுத்துவிடும். இந்த நாடு கூட்டாட்சி, பன்முகத்துவத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. அதை உடைத்துவிட வேண்டாம்.

கேரளா எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. பிற மாநிலங்களிடமிருந்து எங்களைக் கற்றுக் கொள்ள வைக்காதீர்கள். மத்திய அரசின் திட்டங்களில் மாநில அரசின் நிதி அடங்கியிருக்கிறது. ஆனால், அவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டு அதை மாநிலங்களில் அமல்படுத்துகிறார்கள். இது கொஞ்சம்கூட நியாயமானதல்ல.
மத்திய அரசு, மதிப்பிற்குரிய பிரதமர் அவர்கள் எல்லாவற்றையும் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு வருவதையும், அனைத்தையும் பொதுத்துறையாக்குவதையும் நிறுத்த வேண்டும். இந்தியாவின் கூட்டாச்சியைப் பாதுகாத்து, இந்தியச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும். மிகுந்த நேர்மையுடன் மாநிலங்கள் உருவாக்கிய கல்வி நிறுவனங்களை மாநிலப் பட்டிலுக்கு மாற்றி, மாநிலங்களிடமே கொடுக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.