செய்திகள் :

மசினகுடி: ``ஆட்டு மந்தைகளைப் போல் அடைத்தனர், குடிநீர் கூட இல்லை..'' - கொதிப்பில் மக்கள்

post image

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் பிரசித்திபெற்ற மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட இந்த பகுதியில், காடுகளில் வாழும் பழங்குடிகளின் காவல் தெய்வமாக பொக்காபுரம் மாரியம்மன் வழிபாடுநடைபெறுகிறது. நீலகிரி மட்டுமன்றி அருகில் அமைந்துள்ள கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வழிபட்டுச் செல்கின்றனர்.

இந்த கோயிலின் மிக முக்கிய விழாவான தேர் திருவிழாவில் பங்கேற்க மூன்று மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரள்வது வழக்கம். இந்தாண்டு தேர் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்றிரவு தேர் திருவிழா நடைபெற்றது. தேர் ஊர்வலத்தை காண நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். பக்தர்களின் வருகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் முதல் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், முறையான குடிநீர் வசதி கூட செய்யவில்லை என பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தெரிவித்த கூடலூரைச் சேர்ந்த பக்தர்கள் சிலர், "கோயிலுக்குச் செல்வதற்கான முக்கிய வழித்தடமாக இருக்கிறது கூடலூர். ஆனால், கூடலூர் பேருந்து நிலையத்தில் எந்தவிதமான முன்னேற்பாடுகளும்‌ செய்யவில்லை. இரவு நேரத்தில் பெண்கள் கூடும் பேருந்து நிலையத்தில் போதுமான வெளிச்சம் கூட இல்லை. போதிய அளவு அரசு பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், வரிசையில் நீண்ட நேரமாக காத்துக் கிடந்த பக்தர்களை மிரட்டி ஆட்டு மந்தைகளைப் போல கூட்டம் கூட்டமாக ஒரே பேருந்துக்குள் அடைத்து அனுப்பிகின்றனர் காவல்துறையினர். வாட்டும் வெயிலில் தாகம் தீர்க்க கோயில் வளாகத்தில் முறையான குடிநீர் வசதி கூட செய்யவில்லை.

குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் பக்தர்கள்

கோயில் அருகில் மட்டுமே இரண்டு இடங்களில் குடிநீர் வைக்கப்பட்டிருந்தது. குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை தான் ஏற்பட்டது. இனி வரும் காலங்களிலாவது பக்தர்கள் தேவையறிந்து அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என்றனர்.

அடைத்து வைக்கப்பட்ட பக்தர்கள்

மக்களின் இந்த குற்றச்சாட்டு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பேசுகையில், "வழக்கமான ஏற்பாடுகளை செய்திருந்தோம். ஆனால், இந்த ஆண்டு பக்தர்களின் வருகை சற்று அதிகமாகவே காணப்பட்டது. இதனால் சில குறைகள் ஏற்பட்டிருக்கலாம். இது போன்ற குறைகள் இனிவரும் காலங்களில் களையப்படும்" என முடித்துக் கொண்டனர்.

`தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா... உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்!' - ஸ்டாலின் காட்டம்

மத்திய அரசு, தமிழ்நாட்டில் அமலுக்குக் கொண்டுவரத் தீவிரம் காட்டி வரும் 'தேசியக் கல்விக் கொள்கை', 'தொகுதி மறுவரையறை' திட்டங்களுக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.மத்திய அரசின் தேசியக் கல்விக் க... மேலும் பார்க்க

NEP: `கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுங்கள்; கூட்டாட்சியை உடைத்து விடாதீர்கள்..!' - கேரள எம்.பி

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையையும், அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கை பெயரிலான இந்தித் திணிப்பையும் எதிர்த்து தற்போது நடைபெறும் நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் தி.ம... மேலும் பார்க்க

திருப்பூர்: சிட்டாவில் பெயர் சேர்க்க ரூ.7000 லஞ்சம்... வசமாக சிக்கிய VAO; உதவியாளருடன் கைது!

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த முருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (42). திருப்பூர் குமார் நகரைச் சேர்ந்தவர் சாரதாமணி. இருவரும் உறவினர்கள். இந்நிலையில், சாரதாமணி சமீபத்தில் ஊத்துக்குளி ... மேலும் பார்க்க

25 ஆசிரியர்கள் பணி நீக்கம்; பாலியல் புகார்களில் அதிரடி காட்டும் பள்ளிக் கல்வித்துறை!

பாலியல் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அதிலும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாக வரும் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களால் மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் அச்ச உணர்... மேலும் பார்க்க

NEP Row: `தர்மேந்திர பிரதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..!' - வைகோ ஆவேசம்

மத்திய அரசு, தமிழ்நாட்டில் அமலுக்குக் கொண்டுவரத் தீவிரம் காட்டி வரும் 'தேசியக் கல்விக் கொள்கை', 'தொகுதி மறுவரையறை' திட்டங்களுக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.குறிப்பாக, 'தேசியக் கல்விக் கொள... மேலும் பார்க்க

NTK: சோர்வடையும் நிர்வாகிகள்? ; கறார் காட்டும் தலைமை... நாதக-வின் 2026 தேர்தல் வியூகமென்ன?

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஃபீவர் அனலடிக்கத் தொடங்கியிருக்கும் இச்சூழலில், நாம் தமிழர் கட்சி தேர்தல் பணிகளில் பல்வேறு குழப்பங்கள் தலையெடுக்கின்றன. கட்சிக் கட்டமைப்பு, தலைமை ஒருங்கிணைப்பாளர் ச... மேலும் பார்க்க