தமிழகத்தில் கோடை விடுமுறை எப்போது? வெளியான இறுதித் தேர்வு அட்டவணை!
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
தற்போது 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தோ்வு வரும் மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு (முழு ஆண்டு தேர்வு) ஏப். 9 ஆம் தேதி முதல் ஏப். 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தொகுதி மறுசீரமைப்பு: சென்னையில் மார்ச் 22-ல் மாநிலக் கட்சிகள் கூட்டம்!
அதேபோல், 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப். 8 ஆம் தேதி முதல் ஏப். 24 ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப். 21 ஆம் தேதியில் இருந்தும் 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஏப். 25 ஆம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்குகிறது.