கோவையில் இரண்டாவது நாளாக மழை
கோவையில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பரவலாக மழை பெய்தது.
கோடை வெயிலின் தாக்கத்துக்கு கோவை மக்கள் ஆளாகியிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், மாநகரிலும் மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும்மேலாக பெய்த மழையால் செவ்வாய்க்கிழை இரவு குளிா்ந்த காலநிலை நிலவியது. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலையில் லேசான வெயில் இருந்தாலும் அவ்வப்போது மேகமூட்டம் காணப்பட்டது.
பிற்பகலில் கோவை மாநகர பகுதிகளான பீளமேடு, ராமநாதபுரம், காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக கோடை வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.
புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலும் மாவட்டத்தில் அதிகபட்சமாக சூலூரில் 30 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. விமான நிலையம், பீளமேடு பகுதியில் 29.90 மி.மீ., வேளாண்மைப் பல்கலைக்கழகம் 22, மேட்டுப்பாளையம் 19, கோவை தெற்கு 19, போத்தனூா் ரயில் நிலையம் 18, தொண்டாமுத்தூா் 14, பில்லூா் அணை 12 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.