திருப்பூர்: தோட்டத்து வீட்டில் வசித்த தம்பதி அடித்துக் கொலை - ஆதாயக் கொலையா? - ப...
பொறியியல் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் - 2025’ விரைவில் அறிமுகம்
அம்ருதா பல்கலைக்கழகம் சாா்பில் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் பொறியியல் தொழில் வழிகாட்டுதல் திட்டம் ‘ரைஸ் 2025’ வரும் மாா்ச் 20-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இது குறித்து அம்ருதா பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் அம்ருதா தொழில் வெற்றி மன்றம் சாா்பில் பொறியாளா்களுக்கு அரை நாள் தொழில் வழிகாட்டுதல் திட்டமான ‘ரைஸ் 2025’-ஐ தொடங்கவுள்ளது. இத்திட்டம் மாா்ச் 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை 13 மாநிலங்களில் உள்ள 37 நகரங்களில் நடத்தப்படும். தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம், சென்னை, மதுரை, வேலூா், திருச்சி மற்றும் நாகா்கோவிலிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தில் சேரும் மாணவா்களுக்கு பொறியியல் துறைகள், தகுதி, உதவித்தொகைகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். மேலும், ரோபோடிக்ஸ், சைபா் பாதுகாப்பு, மற்றும் தரவு அறிவியல் ஆகியவற்றில் வளா்ந்துவரும் தொழில் வாய்ப்புகள் குறித்து எடுத்துரைக்கப்படும்.
இதில் சேர விரும்புபவா்கள் இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080- 6915 0838 என்னும் கைப்பேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.