சாம்பியன்ஸ் லீக்: பெனால்டியில் வென்ற ரியல் மாட்ரிட்..! காலிறுதிக்கு 8 அணிகள் தேர்வு!
சாம்பியன்ஸ் லீக்கில் அத்லெடிகோ மாட்ரிட்டை பெனால்டியில் வென்றது அசத்தியது ரியல் மாட்ரிட் கால்பந்து அணி.
ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அத்லெடிகோ மாட்ரிட்டை அணி வீரர் கனோர் கல்லாகர் முதல் நிமிஷத்திலேயே கோல் அடித்து அசத்தினார்.
பின்னர் இரு அணிகளும் வலுவான டிஃபென்ஸுகளால் எந்த கோல்களும் அடிக்கவில்லை.
முதல் சுற்றில் ரியல் மாட்ரிட் 1-0 என வென்றதால் இந்தப் போட்டி சமனில் முடிவடைந்தது. பின்னர் கூடுதல் நேரம் ஒத்துக்கியும் முடிவு எட்டப்படாததால் ஆட்டம் பெனால்டிக்கு சென்றது.
பெனால்டியில் அசத்திய ரியல் மாட்ரிட் அணி 4-2 என வென்றது. இதன் மூலம் ரியல் மாட்ரிட் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
மற்ற போட்டிகளில் ஆர்சனல், ஆஸ்டன் வில்லா, டோர்முன்ட் அணிகள் வென்றன.
காலிறுதிக்கு தகுதிபெற்ற 8 அணிகள்
1.பார்சிலோனா
2. பெயர்ன் மியூனிக்
3. பிஎஸ்ஜி
4. இன்டர் மிலன்
5. ரியல் மாட்ரிட்
6. ஆர்சனல்
7.ஆஸ்டன் வில்லா
8.டோர்முன்ட்
Who is going all the way? #UCLpic.twitter.com/c9DzzIcetI
— UEFA Champions League (@ChampionsLeague) March 12, 2025
The last 8 #UCLpic.twitter.com/AaC3G5m9aB
— UEFA Champions League (@ChampionsLeague) March 12, 2025