பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும் பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு கல்லூரியில் பாராட்...
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில்: லட்சக்கணக்கானோர் பொங்கலிட்டு வழிபாடு!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில், லட்சக்கணக்கான பெண்கள் குடும்பத்துடன் வந்து பொங்கலிட்டு வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் வருடாந்திர பொங்கல் விழாவின் தொடக்கமாக மார்ச் 6ஆம் தேதி காப்பு கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று காலை முதல் கோயிலின் சுற்றுவட்டார பகுதிகளில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
இன்று காலை சுத்த புண்ணிய சடங்களுக்கு பின்னா், காலை 10.15 மணிக்கு, கோயில் முன்புள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்பட்டது. அதையடுத்து, பக்தா்கள் பொங்கலிடத் தொடங்கினர்.
பிற்பகல் 1.15 மணிக்கு பொங்கல் நைவேத்தியம் நடைபெறும். இரவில் அம்மன் நகா்வலம் நிறைவடைந்த பின்னா், 14ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு குருதி தா்ப்பணத்துடன் திருவிழா நிறைவடையும். நிகழாண்டு பொங்கல் விழாவில் 40 லட்சத்துக்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.