செய்திகள் :

82 வயதில் மீண்டும் தொகுப்பாளராகும் அமிதாப் பச்சன்!

post image

கோன் பனேகா குரோர்பதியின் 17ஆவது சீசனை நடிகர் அமிதாப் பச்சன் மீண்டும்தொகுத்து வழங்குவதை உறுதிசெய்துள்ளாட்.

கோன் பனேகா குரோர்பதி என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் முதல் மூன்று சீஸன்கள் 2000 முதல் 2007 வரை ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 2010 முதல் சோனி டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

3-வது சீஸனை ஷாருக் கான் தொகுத்து வழங்கினார். இதர அனைத்து சீஸன்களின் நிகழ்ச்சிகளையும் நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கியுள்ளார்.

கடைசியாக 16ஆவது சீசன் ஆக.12இல் தொடங்கியது. உடல் நிலை மோசமானதன காரணமாக படங்களிலும் பெரிதாக நடிப்பதில்லை.

கடைசியாக ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். அவருக்குப் பதிலாக டப்பிங் வேறு ஒருவர் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

கனவுகளை உயிர்ப்புடன் வையுங்கள்

வதந்திகளுக்கு விடியோ மூலம் பதிலளித்துள்ள அமிதாப் பச்சன் பேசியதாவது:

ஒவ்வொரு காலகட்டத்திலும் எனக்கு மீண்டும் ரசிகர்களிடம் அன்பு, இணக்கம், அனைவரது கண்களிலும் வெதுவெதுப்பான பார்வை கிடைக்குமா என யோசிப்பேன். அந்த ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்திலும் எனக்கு நான் எதிர் பார்த்ததைவிட அதிகமாகவே கிடைக்கும். தொடர்ச்சியாக இது எனக்கு வந்துகொண்டே இருக்கிறது. நமது நம்பிக்கை, இந்த ஆசை எப்போதும் இதேமாதிரி பிரகாசம் குறையாமல் இருக்க வேண்டும்.

பிரியாவிடை அளிக்கும் தருவாயில் நான் இதைச் சொல்ல விரும்புகிறேன். நமது முயற்சிகள் யாராவது ஒருவரது வாழ்க்கையத் தொட்டால் அல்லது இங்கு பேசப்படும் வார்த்தை யாருக்காவது நம்பிக்கையை தந்திருந்தால் நமது 25ஆவது ஆண்டு பயணத்துக்கு உண்மையான வெற்றியாக கருதுகிறேன்.

அதனால், பெண்கள், ஆண்களே நான் உங்களை அடுத்த சீசனில் சந்திக்கிறேன். உங்களது கடின உழைப்புகளில் நம்பிக்கையை வையுங்கள். உங்களது கனவுகளை உயிர்ப்புடன் வையுங்கள். நிறுத்தாதீர்கள், மண்டியிடாதீர்கள். நீங்கள் எனக்கு மதிப்பு மிக்கவர்கள். மீண்டும் உங்களை சந்திக்கும் வரை நான் உங்கள் அமிதாப் பச்சன். இந்த சீசனின் எனது கடைசி வார்த்தையாக ஒன்றைச் சொல்லிக்கொண்டு முடிக்கிறேன் - ‘ சுப ராத்திரி'.

சாம்பியன்ஸ் லீக்கில் புதிய சாதனை படைத்த கிம்மிச்..!

சாம்பியன்ஸ் லீக்கில் (யுசிஎல்) பயர்ன் மியூனிக் அணி வீரர் ஜோஷுவா கிம்மிச் புதிய சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் ரவுனண்ட் ஆஃப் 16 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இதில் 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிப் பெற... மேலும் பார்க்க

ஸ்ரீசைலம் கோயிலில் சாமி தரிசனம் செய்த ராஷி கண்ணா..!

ஆந்திரத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோயிலில் நடிகை ராஷி கண்ணா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.தனது இன்ஸ்டா பக்கத்தில் குடும்பத்தினருடன் கோயிலில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து... மேலும் பார்க்க

ஆலங்குடி குருபரிகார கோயிலில் 1008 சங்காபிஷேகம்!

நீடாமங்கலம்: நவக்கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபகவானுக்கு 1008 சங்காபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.இக்கோயில் திருஞானசம்ம... மேலும் பார்க்க

சிசிடிவி காட்சிகளைப் பகிர்ந்த பரினீதி சோப்ரா..!

நடிகை பரினீதி சோப்ரா தனது சிசிடிவி காட்சிகளைப் பகிர்ந்துள்ளார். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் வணிகம், பொருளாதாரம், பொருளியலில் பட்டம் பெற்றபின் 2011இல் நடிகையாக அறிமுகமானார் பரினீதி. 2012இல் நடித்த பட... மேலும் பார்க்க

டெஸ்ட் - சித்தார்த் அறிமுக விடியோ!

நடிகர் சித்தார்த்திற்கான டெஸ்ட் திரைப்படத்தின் அறிமுக விடியோவை வெளியிட்டுள்ளனர்.மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்... மேலும் பார்க்க

கௌதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி?

நடிகர் கார்த்தி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி மெய்யழகன் திரைப்படத்திற்குப் பின், ’வா வாத்தியர்’ வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். அதேநேரம், ப... மேலும் பார்க்க