ஓடிடியிலும் வரவேற்பைப் பெற்ற குடும்பஸ்தன்!
மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் திரைப்படம் ஓடிடி வெளியீட்டிலும் கவனம் பெற்றுள்ளது.
சினிமாகாரன் நிறுவனத் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியானது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மணிகண்டன் தன் குறைவான மாத வருமானத்தில் குடும்பத்தை எப்படி வழிநடத்துகிறார் என்பதையும் வேலைக்குச் செல்லும் ஆண்களின் கசப்பான பக்கங்களையும் இப்படம் பேசியதால் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இதையும் படிக்க: விடுதலை நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு!
தொடர்ந்து, கடந்த வாரம் ஜீ5 ஓடிடியில் வெளியானது. இந்த நிலையில், ஓடிடி வெளியீட்டிலும் இப்படம் கவனம் பெற்றதுடன் இன்ஸ்டாகிராம் மீம் மற்றும் ரீல்ஸ்களில் ‘ஆண்கள்படும் கஷ்டம்’ என மணிகண்டனின் விடியோக்கள் அதிகமாக வலம் வருகின்றன.
#Kudumbasthan Men Suffer Silently pic.twitter.com/Zj7Rup4mvl
— The FilmOGraphic (@TheFilmOGraphic) March 9, 2025
இதனால், ஓடிடி வெளியீட்டிலும் இப்படம் நல்ல விமர்சனங்களையே பெற்றுள்ளது.