செய்திகள் :

திருப்பூர் விசைத்தறி நெசவாளர்கள் கூலி உயர்வு கோரி மார்ச் 19 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

post image

திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் செய்யும் விசைத்தறி நெசவாளர்கள் சங்கம், கூலி உயர்வு கோரி மார்ச் 19 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.

ஜவுளி உற்பத்தியாளர்கள் அதிகரித்து வரும் செலவுகளுக்கு ஏற்ப கூலியை மாற்றியமைக்க வலியுறுத்தி திருப்பூர் விசைத்தறி நெசவாளர்கள் சங்கம் கடந்த சில நாள்களாக போராட்டங்களை நடத்தி வருகிறது.

திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள் மூலம் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும், வேலைவாய்ப்பு பெறுகின்றனா் மற்றும் நாள்தோறும் சுமார் 1.25 கோடி மீட்டர் நெய்த துணியை உற்பத்தி செய்யப்படுகின்றன.

உதிரி பாகங்கள் விலை உயா்வு, மின் கட்டண உயா்வு, பெட்ரோல், டீசல் விலை உயா்வு, ஆள்கள் பற்றாக்குறை, தொழிலாளா்கள் கூலி உயா்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விசைத்தறி தொழிலில் லாபம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய விலைவாசி ஏற்றத்துக்கேற்ப தொழிலாளா்களுக்கு சம்பளம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டி உள்ளது. ஆனால், விசைத்தறியாளா்களுக்கு சரியான கூலி உயா்வு கிடைத்து 12 ஆண்டுகள் ஆகின்றன.

கோவை, திருப்பூா் மாவட்டங்களில் செயல்படும் விசைத்தறிகளுக்கு 2014-ஆம் ஆண்டுக்குப் பின், உயா்த்தப்பட்ட கூலி சரிவர வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுள்ளது. இது தொடா்பாக, அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி, உயா்த்தப்பட்ட கூலியை பெற்றுத்தர வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா் சங்கத்தின் பொருளாளா் காரணம்பேட்டை எஸ்.இ. பூபதி கூறுகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதால் புதிய கூலி உயர்வு கோரி வருகிறோம். மின் கட்டணங்கள், கட்டட வாடகை, விசைத்தறி உதிரி பாகங்கள் மற்றும் தொழிலாளர்களின் ஊதியம் அனைத்தும் கடுமையாக உயர்ந்துள்ளன.

1991 முதல், ஜவுளி உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் மற்றும் கோவை மற்றும் திருப்பூரைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய பேச்சுவார்த்தைகள் மூலம் விசைத்தறி கூலிகள் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் திருத்தி அமைக்கப்பட்டு வருகின்றன.

பிப்ரவரி 2022 இல், இரு தரப்பினரும் 15 சதவிகித கூலி உயர்வை ஒப்புக்கொண்டனர், ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் அதை செயல்படுத்தவில்லை என கூறப்படுகிறது.

இப்போது, ​​நெசவாளர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட திருப்பூர் மற்றும் கோவை விசைத்தறி நெசவாளர் சங்கத்தின் தலைமையிலான ஒரு குழு, 2022 கூலி உயர்வை அமல்படுத்தக் கோருகிறது. மற்றொரு பிரிவு, புதிய கூலி திருத்தத்தை முழுவதுமாக அமல்படுத்துமாறு வலியுறுத்துகிறது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை சுமூகமாக தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு தொழிலாளர் துறையின் உதவி ஆணையர் எஸ். பிரேமா கூறுகையில், கோவை, திருப்பூா் மாவட்டங்களில் செயல்படும் விசைத்தறிகளுக்கு 2014-ஆம் ஆண்டுக்குப் பின், உயா்த்தப்பட்ட கூலி சரிவர வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுள்ளது.

சத்துணவு மைய ஊழியா்களிடம் தணிக்கைகள் மூலம் பிடித்தம் செய்ய வேண்டிய ரூ.257 கோடி தள்ளுபடி -தமிழக அரசு உத்தரவு

இது தொடா்பாக, அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி, உயா்த்தப்பட்ட கூலியை பெற்றுத்தர வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

ஒரு பிரிவு நெசவாளர்கள் முன்பு ஒப்புக் கொள்ளப்பட்ட 2022 கூலி உயர்வை விரும்புகிறார்கள், மற்றொரு பிரிவு புதிய கூலி உயர்வைக் கோருகிறது. இருவேறு கருத்துகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடர முடியாது என்பதால், விசைத்தறியாளா்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளா்களுக்கிடையே ஒருமித்த கருத்தை உருவாக்க திருப்பூா் தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு குழுக்களுக்கிடையே பொதுவான கருத்தை உருவாக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளதாகவும், விரைவில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தார்.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள் மூலம் 4 லட்சம் பேர் நேரடியாகவும்,3 லட்சம் பேர் மறைமுகமாக வேலைவாய்ப்பு பெற்று வரும் நிலையில், மார்ச் 19 முதல் நடைபெறும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தால் நாள்தோறும் சுமார் ரூ.35 கோடி இழப்பு ஏற்படக்கூடும். இது மேலும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும் பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு கல்லூரியில் பாராட்டு!

சென்னை: பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும் பறை இசைக் கலைஞர் வேலு ஆசானை, சென்னை ஏ.எம்ஜெயின்கல்லூரி கௌரவித்துப் பாராட்டியது. பறை இசை என்ற தமிழ்நாட்டின் தொன்மையான, பாரம்பரிய கலையை உயிர்ப்புடன் வைத்திருப்பதில்... மேலும் பார்க்க

40 ஆண்டுகளில் முதல் முறையாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! எரிமலை வெடிக்கும் அபாயம்?

இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் நகரத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று (மார்ச் 13) நிகழ்ந்துள்ளது.நேப்பிள்ஸ் நகரத்தில் இன்று (மார்ச் 13) அதிகாலை 1.25 மணியளவில் 4.4 ரிக்டர் ... மேலும் பார்க்க

செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்-க்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

நாட்டில் 20 வயதுக்குட்டோருக்கான உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்-க்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி... மேலும் பார்க்க

தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் 'ரூ' குறியீடு!

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இலச்சினையை ரூபாய் குறியீட்டிற்குப் பதிலாக 'ரூ' எனப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை(... மேலும் பார்க்க

காவல் துறையினருடன் துப்பக்கிச் சண்டை... குற்றவாளி படுகாயம்! கூட்டாளியுடன் கைது!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சுந்தர்கார் மாவட்டத்தில் காவல் துறையினருடனான துப்பாக்கிச் சூட்டில் முக்கிய குற்றவாளி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.சுந்தர்கார் மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டைச் சேர்ந்த வழக்கில் தேடப்... மேலும் பார்க்க

தீவிரவாதிகளின் கூட்டளிகள் 2 பேர் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பண்டிபோரா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 2 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பண்ட... மேலும் பார்க்க