சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் ம...
தோழி விடுதியில் தங்க விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னையிலுள்ள தோழி விடுதியில் தங்க விரும்பும் பணிபுரியும் பெண்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் பணிபுரியும் பெண்களின் வசதிக்காக அடையாற்றில் 2023 ஜூலை 13-ஆம் தேதி 98 படுக்கை வசதி மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய ‘தோழி விடுதிகள்’ என்னும் பெயரில் விடுதி தொடங்கப்பட்டது.
24 மணி நேர பாதுகாப்பு வசதியுடன் கண்காணிப்பு கேமராக்கள், பயோமெட்ரிக் வருகை பதிவு, காற்றோட்டமான அறைகள், இலவச வைஃபை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், பொழுதுபோக்கு அம்சங்கள் என நவீன வசதிகளுடன் மாத வாடகையாக ரூ. 4,200 முதல் ரூ. 6,850 வரையிலான கட்டணத்தில் இந்த விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த தோழி விடுதியில் தங்க விரும்பும் பெண்கள், தினசரி அல்லது மாதாந்திர அடிப்படையில் அறைகளை முன்பதிவு செய்ய இணையதளம் மூலம் அல்லது 94999 88009, 94457 24179 ஆகிய கைப்பேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.