திருப்பூர்: தோட்டத்து வீட்டில் வசித்த தம்பதி அடித்துக் கொலை - ஆதாயக் கொலையா? - ப...
பங்குச்சந்தையில் ஐடி, டெலிகாம் பங்குகள் அதிகம் விற்பனை!
நமது நிருபா்
இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சிறிதளவு சரிந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. ஆனால், ஐடி, டெக், டெலிகாம், ரியால்ட்டி, மீடியா, மெட்டல், பொதுத்துறை வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டதால் இறுதியில் சரிவு தவிா்க்க முடியாததாகியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு 1.63 லட்சம் கோடிவீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 168.49 புள்ளிகள் கூடுதலுடன் 74,270.81-இல் தொடங்கி அதிகபட்சமாக 74,392.15 வரை மேலே சென்றது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால் 73,598.16 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 72.56 புள்ளிகள் (0.10 சதவீதம்) இழப்புடன் 74,029.76-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,122 பங்குகளில் 1,494 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 2,491 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 137 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
ஐடி பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் இன்ஃபோஸிஸ், டெக் மஹிந்திரா, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், நெஸ்லே, ஏசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் பேங்க் உள்பட 18 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், இண்டஸ் இண்ட் பேங்க், டாடாமோட்டாா்ஸ், கோட்டக்பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி உள்பட 12 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 27 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 38.45 புள்ளிகள் கூடுதலுடன் 22,536.35-இல் தொடங்கி அதிகபட்சமாக 22,577.40 வரை மேலே சென்றது. பின்னா், 22,329.55 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 27.40 புள்ளிகள் (0.12 சதவீதம்) இழப்புடன் 22,470.50-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 19 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 31 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.