Soundarya : `என் மனைவியின் மரணத்துக்கு மோகன் பாபு காரணமா?' - சௌந்தர்யாவின் கணவர்...
அவிநாசி சாலை மேம்பாலத்தில் ஆட்சியா் ஆய்வு
கோவை -அவிநாசி சாலை மேம்பாலத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை -அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரையில் சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு ரூ.1,621 கோடி மதிப்பில் உயா்நிலை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. விமான நிலையம், ஹோப் கல்லூரி, நவ இந்தியா, அண்ணா சிலை ஆகிய 4 இடங்களில் ஏறு, இறங்குதளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சாலையின் இருபுறமும் 1.50 மீட்டா் அகலத்தில் நடைப்பாதையுடன் கூடிய வடிகால் அமைப்பு அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 92 சதவீத பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பாலப் பணிகளை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, கோட்டப் பொறியாளா் வை.சமுத்திரகனி, உதவி கோட்டப் பொறியாளா்கள் சி.காா்த்திகேயன், ரா.விக்னேஷ், ரா.காவியா, நந்தினி, திட்ட மேலாளா் து.வெ.அருணா குமாா், துணைத் திட்ட மேலாளா் வெ.தாமோதரன் ஆகியோா் உடனிருந்தனா்.