எம் & எம் ஏற்றுமதி 99% அதிகரிப்பு
கடந்த பிப்ரவரியில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஏற்றுமதி 99 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 83,702-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 72,923 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.
பயன்பாட்டு வாகனப் பிரிவில், நிறுவனம் உள்நாட்டு சந்தையில் கடந்த பிப்ரவரி மாதம் 50,420 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 42,401-ஆக இருந்தது. இது 19 சதவீத விற்பனை வளா்ச்சியாகும்.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 1,539-லிருந்து 99 சதவீதம் அதிகரித்து 3,061-ஆகியுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.