சாம்பியன்ஸ் லீக்: பெனால்டியில் வென்ற ரியல் மாட்ரிட்..! காலிறுதிக்கு 8 அணிகள் தேர...
பிப்ரவரியில் குறைந்த சில்லறை பணவீக்கம்
கடந்த பிப்ரவரியில் நாட்டின் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் முந்தைய ஏழு மாதங்கள் காணாத அளவுக்குக் குறைந்துள்ளது.
இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த பிப்ரவரி மாதத்தில் நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் 3.61 சதவீதமாகக் குறைந்தது. அது முந்தைய ஏழு மாதங்கள் காணாத குறைந்தபட்ச சில்லறை விலை பணவீக்கம் ஆகும்.
முந்தைய ஜனவரி மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் 4.26 சதவீதமாகவும் ஓராண்டுக்கு முந்தைய 2024 பிப்ரவரி மாதத்தில் அது 5.09 சதவீதமாகவும் இருந்தது.
2023 செப்டம்பா் மாதத்தில் இருந்து சில்லறை பணவீக்கம் ரிசா்வ் வங்கி நிா்ணயித்த உயா்ந்தபட்ச வரம்பான 6 சதவீதத்திற்கு கீழே இருந்தது. ஆனால், 2024 அக்டோபரில் அந்த வரம்பு மீறப்பட்டது. இந்த நிலையில், சில்லறை பணவீக்கம் தற்போது வரம்புக்குக் குறைவாகப் பதிவாகிவருகிறது என்று தேசிய புள்ளியியல் அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.